Onetamil News Logo

ஹைப்ரிட் தாவரங்களில் விளைச்சல் அதிகம்.நோய் தாக்குதல் அதிகம்.இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அதிகம்.எல்லா சத்துக்களும் இருக்கும் . ஆனால் மருத்துவ குணம் கிடையாது ;வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் பேச்சு   

Onetamil News
 

ஹைப்ரிட் தாவரங்களில் விளைச்சல் அதிகம்.நோய் தாக்குதல் அதிகம்.இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அதிகம்.எல்லா சத்துக்களும் இருக்கும் . ஆனால் மருத்துவ குணம் கிடையாது ;வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் பேச்சு   


இயற்கையாக விளையும் தாவரங்களைப் போன்ற சத்தான காய்கறிகளை கொடுக்க முடியுமா என்றால் அதைவிட சிறப்பான முறையில் சத்தான உணவுகளை பெறலாம். விஞ்ஞானிகள் சூரிய வழங்கல் மற்றும் வேர் அமைப்புகளை சிறப்பாக பயன்படுத்தி உருவாக்குவதில் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உருவாகின்றன.
              இதுகுறித்து தூத்துக்குடி சட்ட மக்கள் உரிமை அமைப்பாளர் & வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் கூறியதாவது... இயற்கையாக விளையும் தாவரங்களைப் போன்ற சத்தான காய்கறிகளை கொடுக்க முடியுமா என்றால் அதைவிட சிறப்பான முறையில் சத்தான உணவுகளை பெறலாம். விஞ்ஞானிகள் சூரிய வழங்கல் மற்றும் வேர் அமைப்புகளை சிறப்பாக பயன்படுத்தி உருவாக்குவதில் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உருவாகின்றன.இவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. இதைப் பற்றி ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன? இயற்கையாக விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் உடலுக்கு நல்லது. அதைத் தவிர ரசாயன உரங்கள் போட்டு வளர்த்த செடிகள் மரங்கள் போலத்தான் கலப்பின தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு தீமை விளைவிக்கும் என பெரும்பாலும் கூறக் கேட்டிருப்போம்.
               விதையில்லா காய்கறிகளை, பழங்களை பார்க்கும் போது அதில் எந்த சத்தும் இருக்காது என்ற உடனே அதை சாப்பிடுவதை புறக்கணிப்போம். ஹைப்ரிட் என்று சொல்லப்படுகின்ற அல்லது கலப்பின உணவுகள் உண்மையிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையா என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான் என்று கூறப்படுகிறது.
       கலப்பின தாவரங்கள் என்னவென்று தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டார்கள். நெருங்கிய தொடர்புடைய அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும் பொழுது தான் இந்த கலப்பின மாக்கல் நடைபெறுகின்றன. இந்த டெக்னாலஜி உலகில் தான் நடக்கிறது என்றால் அதுவும் இல்லை. இவை பல ஆண்டுகளாக இயற்கையாகவே நடந்து வருவதாக கூறப்படுகிறது.
                ஒவ்வொரு சாகுபடியிலும் இறுதியில் பன்மடங்கு உற்பத்தியை பெற முடிகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு மற்றும் தயாரிப்பின் காரணமாகத் தான் இதற்கு விலை சற்று அதிகமாக இருக்கிறதாம். மற்ற படி இந்த காய்கறிகளை மற்ற காய்கறிகளை போல நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சமைத்து சாப்பிட வேண்டியது தான்.
        இதில் ஏராளமான ஊட்டச் சத்துக்களும் அடங்கி இருப்பதாக கூறுகின்றனர். கலப்பின வகைகள் மட்டும் இல்லாதிருந்தால் ப்ளாக்பெரி மற்றும் ராஸ்பெரி கலப்பில் உருவான டேபெர்ரி முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கி கலப்பில் உருவான காலம் மற்றும் பாதாமி கலப்பில் உருவான போன்ற பழங்களை நாம் ருசித்து இருக்க முடியாது.
       உலக அளவில் பலராலும் பாராட்டப்பட்டவை இவை. காலே மற்றும் ப்ரோகோலியிலிருந்து உருவாக்கப்பட்ட ஊதா நிற காலிஃப்ளவரில் இருக்கும் நன்மைகளை பற்றி அனைவருக்கும் தெரியும். ஊதா நிறம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்னால் வருகிறது. இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு மருந்தாக சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
              மூளையில் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற தாவரங்கள் சத்து மிக்கவையாகவும் ஆரோக்கியம் நிறைந்தவையாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஹைபிரிட் உணவுகளை பார்த்து பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
          ஹைப்ரிட் தாவரங்களில் விளைச்சல் அதிகம்.நோய் தாக்குதல் அதிகம்.இரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அதிகம்.எல்லா சத்துக்களும் இருக்கும் . ஆனால் மருத்துவ குணம் கிடையாது.விதை உரம் மருந்து எல்லா வற்றுக்கும் நாம் பன்னாட்டு கம்பெனிகளையே நம்பி இருக்க வேண்டும்.சுயசார்பு போய்விடும்.இவ்வளவுக்கும் மேல் தொடர்ந்து இம்மாதிரியான பயிரை பயிர் செய்து வருகையில் விளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின் சுத்தமாக இல்லாது போய் விடும்.மண்வளமும் போய் விடும்.                                                    
          காய்கறி வாடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
1.கிழங்குளை மூடி வைக்க கூடாது. கற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.
2. கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்துவிடும். குளிர் சாதனப் பெட்டியில் அவற்றை வைக்கும்போது தனித்தனியே பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் ஒரே பையில் வைக்க கூடாது.
3. கூடையில் காய்களை போட்டு ஈரத் துணியால் மூடி வைத்து இருந்தாலும், பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.
4. நீரில் நனைத்த காகிதத்தில் கீரைகளை சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாது.
5. பச்சை மிளாயையும் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். அதான் காம்பை அகற்றிவிட்டு வைத்தால் சீக்கிரம் வாடாது, சில நாட்களுக்கு கூட வாடாமல் இருக்கும்.
6. பச்சை பட்டாணி மலிவாக கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பைகளில் போட்டு அதன் வாயை இருக்கக் கட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.
7. பாகற்காயை சீக்கிரம் பழுதுவுடும். இதைத் தவிர்க்க அதை இரண்டு இரண்டாக நறுக்கி வைத்துவிடுங்கள்.
8. தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.
9. கருவேப்பிலையை உதிர்த்து ஒரு பாட்டலில் போட்டு வைக்கலாம்.
10. கொத்தமல்லியை அலுமினியம் பேப்பரில் சுற்றியே அல்லது பாட்டலில் போட்டோ வைக்கலாம்.
          எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
பச்சை மிளகாய்: காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.
மாங்காய்: தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப் பார்ப்பது போல மாங்காயையும் தட்டிப் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும், சதைப்பகுதி நிறைந்திருக்கும்.
முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது; பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம்.
பீர்க்கங்காய்: பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்கவேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம்.
வெண்டைக்காய்: பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.
பீன்ஸ்: ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும் வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சியளிக்கும்; தவிர்க்கவும்.
சௌசௌ: காயின் மேல் பகுதியில் விரிசல்கள் பெரியதாக இல்லாதபடி பார்த்து வாங்கவும். விரிசல்கள் பெரியதாக இருந்தால் அது முற்றிய காய்.
முள்ளங்கி: காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.
கத்தரிக்காய்: ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.
உருளைக்கிழங்கு: தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும்.
முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்கவேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.
அவரைக்காய்: ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo