Onetamil News Logo

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் ; DNA சோதனைக்கும் தயார்  

Onetamil News
 

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் ; DNA சோதனைக்கும் தயார்  


 பெங்களூரு    ;  கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரியை  சேர்ந்த 38 வயதான  மஞ்சுளா என்கிற அம்ருதா  என்ற அந்த பெண் இது தொடர்பாக கூறியதாவது;  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர்,உச்ச நீதிமன்ற நீதிபதி  உள்ளிட்டோருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.அதி அவர் கூறி  இருப்பதாவது..
1960-ம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த என் பாட்டி சந்தியா- ஜெயராம் தம்பதியின் 3 பிள்ளைகளில் என் தாய், ஜெயலலிதா என்கிற கோமளவள்ளியும் ஒருவர். அவர் மகள் தான் நான்.

என் பெயர் மஞ்சுளா என்கிற அம்ருதா என்றும், அம்மு என்றும் என்னை செல்லமாக அழைப்பர். பெற்றோரை இழந்த பின் என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர் பராமரிப்பில் என் தாயார் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். திருமணம் செய்ய முடிவு செய்தனர் என்றாலும், சோபன்பாபுவின் முதல் மனைவியின் எதிர்ப்பால், திருமணம் நின்று போனது.கர்ப்பமாக இருந்த என் தாய், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி என்னை பெற்றெடுத்தார்.

சம்பிரதாயமிக்க குடும்பம் என்பதால் ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க எங்கள் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் என் தாய் ஒப்படைத்தார்.
ஜெயலலிதா எனது அம்மா . நான் பிறந்த பிறகு என்னை தனது சகோதரி சைலஜாவிடம், ஜெயலலிதா ஒப்படைத்தார். பெங்களூருவில் இருந்த சைலஜா – சாரதி தம்பதியினர் என்னை அவரது சொந்த மகளாகவே வளர்த்தனர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு  1996 ஆம் ஆண்டு சைலஜா அம்மையார்  ஒரு கடிதம் எழுதி தந்தார்  அவற்றை  எடுத்துக்கொண்டு சென்னை போயஸ் கார்டனுக்கு சென்று  அம்மாவை பார்த்தேன் அவர்  என்னிடம்   பார்த்ததும் ஜெயலலிதா மிகவும் பாசத்தோடு நடந்துகொண்டார்.
அப்போது என்னிடம் ‘எக்காரணம் கொண்டும் அரசியலுக்கும், திரையுலகிற்கும் வரக் கூடாது.என்றும்  எனது மகள் என யாரிடமும் சொல்லக் கூடாது. பெங்களூருவிலேயே இருக்க வேண்டும்’ என்று  உறுதியாகக் கூறினார். அதனால் நான் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை  என்னை வளர்த்த வளர்ப்புத் தாய் சைலஜாவும் அண்மையில் இறந்து விட்டார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதா அம்மாவும்  இறந்து விட்டார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலமுறை சந்திக்க சென்றேன். சசிகலா குடும்பத்தினர் என்னை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுதாரர்கள் என செய்தி வெளியானது.                                                                           
  இதை பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார்.நான் பிறந்தபோது ரஞ்சினி ரவீந்திரநாத், லலிதா ஆகியோரும் என் தாயாரை பராமரித்துள்ளனர். அவர்களுக்கு என் பிறப்பு ரகசியம் தெரிந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல் நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார். எனவே, சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும். 
                                                                                                                                                ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டதாலே இறந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.நான் பிறந்தபோது லலிதா, ரஞ்சினி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை தங்களது வீட்டில் தங்கவைத்து பராமரித்துள்ளனர். நான் ஜெயலலிதாவின் மகள் என்பதில் சந்தேகம் இருந்தால் அவரது உடலை தோண்டி எடுத்து DNA  சோதனை நடத்த வேண்டும். நான்  தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo