விபத்தில் இடது காலை இழந்தாலூம் தனது தன்னம்பிக்கையுடன் சைக்கிள் பயணம் மூலமாக சாதனை
கோவில்பட்டி ,டிச.22: சைக்கிள் பயணம் மூலமாக தன்னம்பிக்கையுடன் சாதனை படைக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி
விபத்தில் இடது காலை இழந்தாலூம் தனது தன்னம்பிக்கையுடன் சைக்கிள் பயணம் மூலமாக சாதனை படைக்க மதுரையைச் சேர்ந்த வடிவேல் என்ற வாலிபர் மதுரையில் இருந்து கன்னியாகுமாரிக்கு சைக்கிள் பயணம் மேற்க்கொண்டுள்ளார்
தன்னம்பிக்கையும், மன தைரியம் இருந்தால் எதை சாதிக்க முடியும் என்று பலர் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இதன் வழியில் விபத்தில் தனது இடது காலை இழந்த போதிலும் சைக்கிள் பயணம் மூலமாக சாதனையை படைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் மதுரையைச் சேர்ந்த வடிவேல் என்ற வாலிபர்.டிப்ளமோ மெக்கனிக்கல் வரை படித்துள்ள வடிவேல்;. தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 2012ம் ஆண்டு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளனாதில் வடிவேல் தனது இடது காலை இழந்தார். காலை இழந்த பின்பு 2 ஆண்டுகள் வீட்டிற்குள் முடங்கி கிடந்த வடிவேலுக்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கொடுத்த ஊக்கத்தினை தொடர்ந்து வடிவேல் தனது சகஜ நிலைக்கு திரும்ப தொடங்கினார். சிறுவயது முதல் சைக்கிள் பயணத்தில் ஆர்வம் கொண்டு வடிவேல், அதில் சாதனை நிகழ்த்தி தனது தன்னம்பிக்கையும், தன்னால் முடியும் என்பதனை உலகத்திற்கு உணர்த்த முடிவு செய்தார். அதன் முதன் முயற்சியாக பைக்கில் தனியாக 6723 கிலோ மீட்டர் தூரம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். தனது அடுத்த முயற்சியாக சைக்களில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல பயிற்சிகள் எடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்களில் பயணம் மேற்க்கொண்டார். திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் வழியாக கோவில்பட்டிக்கு வந்த வடிவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில் விபத்தில் காலை இழந்த போதும், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக சாதனைகளை மேற்கொள்ள தன்னம்பிக்கை பிறந்தது மட்டுமின்றி, தன்னால் சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தாக கூறும் வடிவேல் மாற்றுத்திறனாளிகளை அவர்களது குடும்பத்தினர் ஊக்கம் கொடுத்தால் போது பல சாதனைகளை படைப்பார்கள் என்று தெரிவித்தார்.