Onetamil News Logo

இம்மானுவேல் சேகரன் 220 வது நினைவு தினம் ;அதிமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

இம்மானுவேல் சேகரன் 220 வது நினைவு தினம் ;அதிமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை  


பரமக்குடி 2019 செப் 11 ;ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இம்மானுவேல் சேகரன் 1924 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் தேதி பிறந்தார்.இவர் 1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி கொல்லப்பட்டார், 
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் ஆசிரியர் வேதநாயகம், ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது. காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, உதயகுமார் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் தி.மு.க.அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo