Onetamil News Logo

 2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு புதிய காரியம் நடக்கப் போகிறது. நீங்கள் புதிய ஆசீர்வாதங்களைக் காணப்போகிறீர்கள் ; மோகன் சி.லாசரஸ் புத்தாண்டு வாழ்த்து

Onetamil News
 

 2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு புதிய காரியம் நடக்கப் போகிறது. நீங்கள் புதிய ஆசீர்வாதங்களைக் காணப்போகிறீர்கள் ; மோகன் சி.லாசரஸ் புத்தாண்டு வாழ்த்து 


  தூத்துக்குடி டிசம்பர் 30 ;   2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு புதிய காரியம் நடக்கப் போகிறது. நீங்கள் புதிய ஆசீர்வாதங்களைக் காணப்போகிறீர்கள் ; மோகன் சி.லாசரஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
                
            தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
           2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு புதிய காரியம் நடக்கப் போகிறது. நீங்கள் புதிய ஆசீர்வாதங்களைக் காணப்போகிறீர்கள்,உங்களுக்காக புதிய வழிகள் திறக்கப்படப்போகிறது. அதற்காக இந்த ஆண்டு கர்த்தர் உங்களுக்காக கொடுத்த வாக்குத்தத்தம்“இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”. உங்களுக்காகத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை சொல்கிறார்.இந்த வாக்குத்தத்தை நீங்கள் விசுவாசித்து அதைஉங்களுக்குரியதென்று நீங்கள் சொந்தமாக்கிக் கொண் டால் உங்கள் வாழ்க்கையில் புதிய காரியம் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் குடும்பத்தில், உங்கள் வேலையில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் பிள்ளைகள் காரியத்தில், உங்கள் ஊழியத்தில் புதிய ஆசீர்வாதம் உண்டாகும். புதிய ஆசீர்வா தங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள புதிய இருதயம் நமக்குள்ளே உருவாக வேண் டும். ஆவிக்குரிய வாழ்க்கை வாழ ஆவியானவர் நம் வாழ்க்கையில் வர வேண்டும். நும்முடைய சிந்தனை புதிதாகவேண்டும்.புதியசரீரமாக நம்சரீரத்தை மாற்றவேண்டும். முந்தினவைகளை நினைக்க வேண்டாம்,சிந்திக்கவும் வேண்டாம்.இந்த ஆண்டு அதிக நேரம் ஆண்டவரின்பாதத்தில் இருந்துஜெபிக்க,உங்களை அர்ப்பணித்துக்கொண்டால் புதியபெலன் தருவார்.“இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்த கர்த்தர் நம்மை மாத்திரமல்ல,நமதுசமுதாயத்தையும்,நம்முடைய பட்டணத் தையும்,நம்முடைய கிராமத்தையும், நம்முடைய மாநிலத்தையும், நம்முடைய தேசத் தையும் கர்த்தர் புதிதாக்க விரும்புகிறார்.அனைவருக்கும் எனது அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo