Onetamil News Logo

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பண வெகுமதி வழங்கி பாராட்டு 

Onetamil News
 

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பண வெகுமதி வழங்கி பாராட்டு 


தூத்துக்குடி 2021 நவம்பர் 24 ;சாத்தான்குளம் மெயின்ரோடு பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று பண வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின்ரோடு பகுதியில் கடந்த 22.11.2021 மாலை 2 இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தை பார்த்த பொதுமக்களில் ஒருவரான சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் சற்குணம் (30) என்பவர் உடனடியாக காயம் பட்டவர்களில் மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை தனது தோளில் தூக்கி கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உதவியுள்ளார். மற்ற காயம்பட்டவர்களை ஸ்ட்ரெட்சர் மூலமாக பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து சிசிடிவி காட்சிகளில் பதிவானது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வைரலானது. 
மிகவும் நெகிழ்ச்சியான மேற்படி சம்பவத்தில் உடனடியாக  காயம்பட்டவரை மருத்துவனையில் அனுமதித்து துரிதமாக செயல்பட்ட சற்குணம் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அவரின் மெச்சத் தகுந்த செயலினை பாராட்டி பண வெகுமதி வழங்கி வாழ்த்தினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது இதுபோன்று எதிர்பாராத விபத்து நடக்கும் போது பொதுமக்கள் தாராளமாக காயம்பட்டவரை உடனடியா மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர்களின் பெயர், முகவரி போன்ற எந்த தகவலும் கேட்கப்படுவது இல்லை, கேட்கவும் மாட்டார்கள். எனவே இது போன்ற விபத்தை பொதுமக்கள் பார்க்க நேர்ந்தால் அதில் காயம்பட்டவரை காப்பாற்றும் பொருட்டு உடனடியாக தைரியமாக உதவிகள் செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo