Onetamil News Logo

ஏ.எம்.பட்டி கிராமத்தில் வடிகால் இல்லாத சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்லமுடியாததால்  மக்கள் அவதி 

Onetamil News
 

ஏ.எம்.பட்டி கிராமத்தில் வடிகால் இல்லாத சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்லமுடியாததால்  மக்கள் அவதி 

தூத்துக்குடி 2020 நவம்பர் 19 ;தமிழகத்தில் வடகிழக்கு மழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது மேலும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாததால் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வீடுகளில் மழைநீர் தேங்குகிறது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வீடுகளில் தேங்கியுள்ள மழை நீரால் டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது. 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.எம்.பட்டி  என்கின்ற கிராமத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இந்த பகுதியில் பேவர் பிளாக் சாலை வடிகால் வசதியை ஏற்படுத்தாமல் போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை நீர் வீட்டில் தேங்கியும் , தெருவில்  தேங்கியும் வெளியில் செல்ல முடியாமல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. 
இந்த கிராமத்து மக்கள் வடிகால் அமைத்து சாலை போடுங்கள் என்று பலமுறை கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள். இப்பகுதியில் நீண்டகாலமாக சாலைகள் போடப்படாமல் இருந்திருக்கிறது. சமீபத்தில்தான் பேவர் பிளாக் சாலை போடப்பட்டிருக்கிறது. அந்த சாலை போடப்பட்டதால்  மக்களுக்கு பயன்பாடு இல்லாமல் போயிருக்கிறது அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வழி இல்லை இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பகுதியில் தெருக்களில் முழங்கால் அளவு வீடுகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் குடியிருப்புவாசிகள்  வீட்டில் இருந்து சாலைக்கு வெளியே வர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் கூறியதாவது......... எங்கள் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள் இந்த மழை வெள்ளம் காரணமாக வீடுகளில் சிறிய தெருக்களில் மழை வெள்ளம் வந்ததால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கின்றது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பாம்பு பூச்சி போன்ற விஷ உயிரினங்கள் வருவதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள். இப்பகுதி மக்கள் சார்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகிகளிடம் கூறியும் அவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வடிகால் அமைத்து தண்ணீரை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo