தூத்துக்குடி சிதம்பர நகரில் பட்டாபகலில் கஞ்சா ஆசாமி கடையில் புகுந்து அடிதடி ரகளை
தூத்துக்குடி 2022 செப் 23; தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இவை கூலி தொழிலாளர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கையால் தினந்தோறும் குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள். தண்டனை பெற்று கொடுக்கிறார்கள். இந்த நிலையில் சிறுவர்களையும். இளம் வயது வாலிபர்களையும் விட்டு வைக்கவில்லை. தூத்துக்குடியில் சிதம்பர நகர் பிரையன்ட் நகர் பிரதான சாலையில் ஈகிள் புக் சென்டர் எதிரில் உள்ள மண்பானை விற்பனை கடைக்கு புகுந்து நண்பகல் 1:30க்கு சாதுவான நபரிடம் உனக்கு எந்த ஊருடா? என்று கேள்வி கேட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து விட்டு சென்று இருக்கிறான் கஞ்சா ஆசாமி. இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது காவல் ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். இளம் வயது கஞ்ச ஆசாமிகள் கண்ணில் காண்பவரிடம் சண்டை இழுத்து அவர்களை தரக்குறைவாக பேசி வேதனைப்படுத்தி அடிக்கும்,நிலைமை சுதந்திர நாட்டில் நடப்பதனால் எல்லோரும் பயப்படுகிறார்கள், என்று தனியும் இந்த சுதந்திர தாகம்.