ஒட்டப்பிடாரத்தில் தொழில் வரி கட்டாமல் விவசாய நீர்நிலை ஓடைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அனுமதி இல்லாமல் மின்கம்பங்கள் நட்டிய காற்றடி ஆலைகள் அட்டூழியம்,கிடுக்கிப்பிடி போட்ட ஊராட்சிகள்
ஒட்டப்பிடாரத்தில் தொழில் வரி கட்டாமல் விவசாய நீர்நிலை ஓடைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அனுமதி இல்லாமல் மின்கம்பங்கள் நட்டிய காற்றடி ஆலைகள் அட்டூழியம்,கிடுக்கிப்பிடி போட்ட ஊராட்சிகள்
ஓட்டப்பிடாரம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொழில் வரி கட்டாமல் விவசாய நீர்நிலை ஓடைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அனுமதி இல்லாமல் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது அகற்ற 25க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள் இதை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வேலாயுத சாமி கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கலெக்டரிடம் இது தொடர்பாக மனு அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி உதவி இயக்குனர் சாந்தி தலைமையிலும் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலையிலும் ஊராட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது இதில் கலந்துகொண்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அத்துமீறலில் ஈடுபடும் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தொழில் வரி உட்பட நான்கு வரிகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் உள்ளாட்சி பாதைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அவர்கள் பாதைகளை பயன்படுத்துவதை தடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் செக் போஸ்ட் அமைத்துக் கொள்ளலாம் தனியார் நிறுவனங்கள் ஊராட்சிகளுக்கு தொழில் வரி உள்பட நான்கு வரிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழி ஏற்ற ஊராட்சி தலைவர்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்