மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஏ .பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி அணி வெற்றி
தூத்துக்குடி மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் ஏ .பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி இன்று 21.08.2022 தூத்துக்குடி பி & டி காலனியில் நடைபெற்றது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டனர். இதில் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி அணி முதலிடத்தை பெற்றது. ஜெ. ஜெய ஆர்த்தி 2 ஆம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் சி. மமீதா 2 ஆம் ஆண்டு கணித மாணவியர் சிறந்த விளையாட்டாளர் என்ற விருதை பெற்றனர்.
நிர்வாகமும், கல்லூரி முதல்வரும் உடற்கல்வி இயக்குனர் டாக்டர். ர. அனிஸ்டா மற்றும் விளையாட்டு வீரர்கள்களான ம. சௌந்தர்யா, ஜெ.ஜெய ஆர்த்தி, சி.மமீதா, யு.ரித்திகா, வர்ஷினி, சோபனா மற்றும் சங்கீதா ஆகியோரை பாராட்டினர்.
இப்போட்டியினை தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ச. முருகேசன் மற்றும் செயலாளர் பி. கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்