தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 1124 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 293 வழக்குகள் மொத்த தீர்வு தொகை ரூ 5,35,64,384/-.
தூத்துக்குடி 2023 செப் 9 ;தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதன்மை மாவட்ட நீதிபதி M.செல்வம், தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 13 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 1124 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 293 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை Rs.5,35,64,384/-. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3951 வழக்குகளில் ரூ 5,74,09,027/- மதிப்புள்ள 3038 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ஆக மொத்தம் 5075 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3331 வழக்குகள் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ 1,09,73,411/- (ரூபாய் பதினொரு கோடியே ஒன்பது இலட்சத்து எழுபத்தி மூவாயிரத்து நானுற்றி பதினொன்று மட்டும் /-) ஆகும் . தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி (பொறுப்பு) A.பிஸ்மிதா முதுநிலை நிர்வாக உதவியாளர் S.தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் செல்வி.A.முத்து லெட்சுமி,P.இசக்கியம்மாள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.