தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வீதி வீதியாக நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டனர்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.
அதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க பொதுமக்களுக்கு வாட்சப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் குறைபாடுகளை மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக மாநகராட்;சி 23வது வார்டு பனை வெல்லம் சங்கம் அருகில் அமைக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
பின்னர் முத்துகிருஷ்ணாபுரம், இரண்டு மற்றும் ஆறாவது தெரு, பூபால்ராயர்புரம் 1,2,3, ஆகிய பகுதிகள் உள்பட பக்கிள் ஓடை இடங்களில் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதை கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கனிவோடு பெற்றுக் கொண்டு, விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்கள்.
அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்கவும் வார்டுக்குட்பட்ட பகுதிகளின் நிலவரங்களை நேரில் கண்டறியவும் நடந்தே சென்ற போது பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் சாலைகள் அமைத்து தரவில்லை கழிவுநீர் கால்வாய்கள் முறையாக இல்லாத நிலை உள்ளது. கடந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இது போன்று நேரில் வந்து குறைகளை கேட்டதில்லை. நீங்கள் வந்து கேட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே இந்த பகுதிகளில் முறையாக சாலை வசதியும் கழிவுநீர் கால்வாய் வசதியும் செய்து கொடுக்க வேண்;டும் அதே போல் இந்த பகுதியில் உள்ள ரவுண்டான பகுதியும் இரண்டு பூங்காக்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தேவையற்ற அசம்பாவித செயல்களில் சிலர் ஈடுபடுவதால் அதில் ஒன்றை சமப்படுத்தி மற்றொன்றை மட்டும் நல்லமுறையில் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வைத்தபோது அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக குறிப்பெடுத்துக்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமியிடம் இப்பகுதி ஆய்வின் போது இந்த குறைபாடுகளை எப்படி தீர்த்து வைக்கலாம் என்று இருவரும் பொதுமக்கள் மத்தியில் கலந்;து ஆலோசித்து பேசியதை அனைவரும் தங்களது மகிழ்ச்சியின் வெளிபாட்டை தெரிவித்தனர்
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் தனலட்சுமி, வட்ட செயலாளர்கள் சேகர், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சீதாராமன், ஜோஸ்வா, சங்கர், அனந்தப்பன், சரவணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மற்றும் அல்பட், மணி, உலகநாதன், ஜோஸ்பர், இந்திய கம்யூனிஸ்கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், முன்னாள்; கவுன்சிலர்கள் ரவீந்திரன், பொன்னையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.