Onetamil News Logo

திருநெல்வேலியில் தெரு நாய்களை பிள்ளைகளாக பராமரிக்கும் தம்பதியினர் 

Onetamil News
 

திருநெல்வேலியில்  தெரு நாய்களை பிள்ளைகளாக பராமரிக்கும் தம்பதியினர்   



திருநெல்வேலி, ஜன.29: உலக அளவில் நாய்கள் 50 கோடி இருக்கிறது,இதில் 40 கோடி தெரு  நாய்கள்  உள்ளன.இதில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் 10 கோடி ;இந்தியாவில் 1,71,38,349 தெரு நாய்கள் உள்ளன.நகரத்தில் 25 கோடியே 10 லட்சத்து நாய்கள் உள்ளன.கிராமத்தில் 1,கோடியே 46 லட்சத்து 28 ஆயிரம் நாய்கள் உள்ளன. இந்தியாவில் தெரு நாய்கள் கடித்து 1 கோடியே 71 லட்சத்து 4 பேர் பாதிக்கப்படுகின்றனர்.உலக அளவில்  வருடத்திற்கு 59 ஆயிரம் பேர் தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் நோய் தாக்கி இறக்கின்றனர். இந்தியாவில் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர்.உலகில் 36 சதவீதம் பேர் நாய்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.வருடந்தோறும் தெரு நாய்கள் பாதிப்பினால் தில்லியில் 77 ஆயிரத்து 294 பேர்,  மும்பையில் 58 ஆயிரத்து 317 பேர்,சென்னையில் 34 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.  இந்தியாவில் 10%  தெருநாய்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்படுகிறது.                                                             
                                                                                                                                                                                                   
வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு,. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பே தனி தான் என்று கூறுகிறார்  திருநெல்வேலி முதலாளி நகரை சார்ந்த பத்மநாதன் கல்விக்கரசி தம்பதியினர்,
இவர்களை சந்திக்க அவரது இல்லம் சென்ற பொழுது அவர்கள் மேலும் கூறியது..நாய் நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பு என்று வந்தால் மிரட்டி எடுக்கும். சிலருக்கு நாய் என்றால் உயிர்! சிலருக்கு அருவருப்பு. எனக்கு நாய் என்றால் உயிர் என்று கூறினார். எனது கணவர் பத்மநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார்.எனது மகன் வங்கியில் மேலாளராகவும்,மருமகள் நெடுஞ்சாலைத் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்கள்.அவர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். எனது கணவருக்கு 30 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருகிறது.அதில் 5 ஆயிரம் ரூபாய் நாய்களின் மேம்பாட்டுக்கு செலவளிக்கிறோம் என்றார்.மேலும் தினமும் 100 காக்காவுக்கு,அணில்,புனில்,சிட்டுக்குருவி போன்றவைகளுக்கு 1கிலோ சமைத்து உணவு வழங்குகிறோம்,
நாய் மாதிரி நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்’, ‘கண்ட கண்ட தெரு நாய்ங்க’ என வாழ்த்துதல், தூற்றுதல், கிண்டல் உள்ளிட்ட அனைத்திற்கும் நாயை உதாரணமாக பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்று. ஆனால், எத்தனை பேர் அந்த வாயில்லா ஜீவன் வாலாட்டி வரும்போது வாஞ்சையுடன் அரவணைத்து அதற்கு உணவு அளிக்கிறார்கள்? அதிலும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் தெரு நாய்களென்றால் சொல்லவே தேவையில்லை, கையில் கிடைத்ததைக்கொண்டு அடித்து விரட்டுவதுதான் முதல் வேலையாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் வீதியில் சுற்றித் திரியும் நாய்களை எடுத்து பராமரிப்பதுடன் ஆரோக்கியமான உணவு, குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி,3 மாதத்திற்கு  ஒரு முறை டிடி போடுவது வழக்கமாக செயல்படுத்தி வருகிறோம், நாய்களுக்கு மாதம் ஒரு முறை  மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். மாதம் அரிசிக்கு ரூபாய் 3000/- ,கோழிக்கறிக்கு  ரூபாய் 2000/-  செலவு செய்கிறோம், ஒவ்வொரு மாதமும் பூச்சி மருந்து கொடுத்து வருகிறோம்,வெறி நாய் தடுப்பூசி வருடத்திற்கு ஒரு முறை நாய்களுக்கு செலுத்தி வருகிறோம்,வாலிலிருந்து தலைவரை சொறி,வராமல் தடுக்க மருந்து தேய்த்து வருகிறோம்,உணவு ஜீரணிக்க செலுசில் வழங்குவோம், எங்க வீட்டில் வளரும் 10 நாய்களும் யூரின் ,மோஷன் போக வீட்டுக்கு வெளியே ஒதுக்குபுறமாக போய் இருந்து விட்டு வந்து விடும்,என்னை எல்லோரும் நாய் வளர்க்கும் அம்மா என்று தான் கூறுவார்கள்,பெண் நாய்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன்  செய்து விடுவோம்,இதனால் பெண் நாய்கள் குண்டாகத் தெரிகிறது.எங்க வீட்டுக்கு பெண் நாய்கள் சாப்பிட வரும் அது வேகமாக சாப்பிட்டு விட்டு அதன் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு விரைவாக சென்று சாப்பிட்ட உணவை கக்கி கொடுத்து விட்டு திரும்பவும் வந்து விடும் என்று கூறினார்.                             
                                                                                                                                                                                                    மேலும் கல்விக்கரசி கூறியதாவது...நாய் மீது எங்களுக்கு பற்று இருக்கிறது அது போல எங்களது பிள்ளைகளும் உதவியாக இருக்கிறார்கள்.  தற்போது என்னுடைய பையனும் நாய் என்றால் பிரியமாக இருக்கிறான்.  வேறு எங்காவது செல்லும் போது அதைப் பராமரிக்க, சாப்பாடு கொடுக்க என்ற நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் வேறு எங்கும் போனாலும் நாய்க்கு உணவு வைக்க நண்பகல் 1 மணிக்குள் வந்து விடுவேன் என்றார்.
இது ஒரு ஏக்கமாகவே மாறி விட்டது. எங்காவது நாய்க் குட்டியைப் பார்த்தால் கையில் எடுத்துக்கலாம் தடவிக் கொடுக்கலாம் என்று தோன்றும்.
 நாய்க் குட்டிகளின் சேட்டைகளை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. முகத்தில் நவரச நடிப்பைக்காட்டி நம்மை அசத்தும். ஒரு நாய்க் குட்டி இருந்தால், நமக்கு நேரம் போவதே தெரியாது. ஏதாவது சுட்டித்தனமாக செய்து கொண்டே இருக்கும்.
வீட்டில் இருக்கும் போது நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் காலுக்குள்ளயே சுற்றிக்கொண்டு இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.

நாங்கள் வீட்டில் இரவில் இருந்த பொழுது நல்ல பாம்பு ஒன்று வந்தது.வீட்டுக்குள் பாம்பு வர விடாமல் நாய் தடுத்து குழைத்து கொண்டே இருந்தது.அதன் பின்னர் வந்து  பாம்பை அடித்து கொன்றோம் .வீட்டில் எப்பொழுதும் பெரிய பிரம்பு கம்புகள்  எப்போதும் தயாராக இருக்கும். பாம்பு வருகிறது என்றாலே ராஜபாளையம்  நாய்  கத்தும் சத்தத்தில் வித்யாசத்தை உணரலாம்.
வழக்கமாக கத்துவதற்கும் பாம்பு போல ஒரு விஷப்பூச்சிகள்  வந்தால் அதைப் பார்த்து கத்துவதற்கும் வித்யாசம் இருக்கும். இதை வைத்தே நாங்கள் எச்சரிக்கையாகி விடுவோம். நாங்கள் ராஜபாளையம்  நாய்க்கு  சாப்பாடு மட்டுமே போட்டோம் ஆனால், எங்களுக்கு இவன் செய்த உதவிக்கு நாங்கள் ஆயுளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
வாசலில் தான் கட்டி வைத்து இருப்போம் இதைத் தாண்டி எவரும் உள்ளே செல்ல முடியாது. யார் வந்தாலும் கதவை திறக்கும் முன் ராஜபாளையம்  நாய் கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதி செய்த பிறகே நுழைவார்கள். அந்தளவிற்கு மிரட்டலாக இருக்கும். எனக்கு மட்டும் கட்டுப்படும்.
அதன் வாழ்நாளில் குறைந்தது 10 பாம்பிற்கு மேல் காட்டி கொடுத்துள்ளது. 
நாய்களின் ஆயுள் காலம் 14  ஆண்டுகள் தான்,நாய்களை எங்களது  குழந்தையைப் போலத் தான் கொஞ்சுவோம் ,எங்கள் குடும்பத்தினருடன் இருக்கும். நாங்கள் எங்காவது வெளியே சென்றால் நாங்கள் வரும் வரை வேறு எவரும் உணவு கொடுத்தால் கூட சாப்பிடாது. சோர்ந்து போய் இருக்கும்.
நாங்கள் வரும் சத்தம் கேட்டால் இது அடையும் சந்தோசத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். 

 இந்த நாய்கள் என் மீது வைத்து இருந்த அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதில் சரியாக ஒன்றாவது நிமிடத்தில் வரும் நாய் போல அடங்காமல் இருக்கும்.                            
                                                                                                                                                                                     
நானும்  என்  கணவரும், பரபரப்பான குடும்பச் சூழலில் தெருநாய்களை எடுத்து தன் வீட்டில் பராமரிப்பது சிரமமான காரியம் என்றாலும், அதை தனது அன்றாடக் கடமையாக செய்து வருகிறோம்.
“வீட்டுக்கு முன்னாள்  ஏராளமான தெருநாய்கள் உலவி வருகிறது.. அந்த நாய்களுக்கு நாள்தோறும் வீட்டின் முன், மதிய உணவு,மாலை உணவு  வைப்போம். அதனால், இப்பகுதியில் சுற்றும் தெருநாய்கள் மதியம் வீட்டருகே வந்துவிடும். அவற்றில் சில குட்டி நாய்களை எடுத்து பராமரிக்கத் தொடங்கினேன். கடந்த 20 ஆண்டுகளாக இது போல் செய்து வருகிறேன். ஏறத்தாழ 20  நாய்கள் வீட்டில் இருந்தன.அருகில் உள்ளவர்கள் குறுநா மருந்து வைத்து 10 நாய்களை கொன்று விட்டனர்.  என்று வருத்தத்துடன் கூறினார் கல்விக்கரசி 
வீட்டில் நாய்கள் சாதாரணமாக உலவும். எங்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதில்லை. நாய்களுக்கு மாதம் ஒரு முறை திருநெல்வேலி  கால்நடை மருத்துவமனை டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார். அதுபோல் உடல்நலம் குன்றும் நாய்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
“வீதியில் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நாய்களை எடுத்து வந்தும் பராமரித்து வருகிறேன். ஒரு குட்டி நாய் இரண்டு நாளுக்கு முன்னர் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளது.யாரோ போட்டு விட்டு சென்று விட்டனர்.அதற்க்கு கால் ஒடித்து இருந்தது.அதற்கு கட்டு போட்டு வருகிறோம் .விரைவில் சரியாகிவிடும், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை தந்து வருகிறோம். என்றாலும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது.. வாயில்லா ஜீவன்களைப் பராமரிப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்கு எனது கணவர், மகன், மருமகள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்” என்கிறார் கல்விக்கரசி .
நாய் வளர்ப்பதில் உள்ள பொறுப்பு என்பது, குழந்தை பராமரிப்பைப் போன்றது. குழந்தையாவது தனக்கு வேண்டியதைக் கேட்கும், வலித்தால் அழும். ஆனால், வாயில்லாத நாயோ, பேசாமல் வதைபடும். சில வீடுகளில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாயைக் காணும்போது, இதைப் பற்றி நினைத்துக்கொள்வேன். மனிதரைத் தனிமைச் சிறையில் அடைப்பதைப் போல, இது ஒரு சித்திரவதை. நம்மூரில் நாய்கள் படும் சித்திரவதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் தொல் பழங்காலத்துக்கு முன்பே நாய் மனிதருடன் சேர்ந்து வாழ்ந்தது என்பதைப் பாறை ஓவியங்கள் மூலம் அறிய முடிந்தாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் குதிரை, மாட்டைப் போன்று மனிதருக்காக வேலை செய்யும் விலங்காகவே அது இருந்தது. காவலுக்கும் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டது. அதிலும் பாமரர், விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினரே நாய்களை வளர்த்தனர். மற்றவர்கள் நாயைக் கேவலமாகப் பார்த்தனர். ‘நாய்’ என்பது ஒரு வசவுச் சொல்லானது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகத்தான் நம் நாட்டில் நாய் செல்லப்பிராணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாகப் பிரிட்டிஷார் வந்த பிறகுதான். நாய்களை வளர்ப்பதில் பெயர்பெற்ற பிரிட்டிஷார், ஆயிரக்கணக்கில் அவற்றை இறக்குமதி செய்தனர். அது வரை நாயை மட்டு மல்ல, எல்லா உயிரினங்களையும் தூரத்திலேயே வைத்திருந்த நம்மூர் மேட்டுக்குடி மக்கள் சிலரும் வெள்ளைக்காரரைப் பின்பற்றி கிரிக்கெட், கோல்ஃப் விளையாடத் தொடங்கியது போல, நாய் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நாய் வளர்ப்பில் ஒரு அடிப்படை விதி, நம் நாய் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக இருக்கக் கூடாது. அதற்காக நாய் பழக்கப்படுத்தப்பட வேண்டும். சதா குலைக்காமல் இருக்க, வீட்டுக்கு வருபவர்கள் மேல் தாவாமல் இருக்க, நடைப்பயிற்சியின்போது நம்மை இழுத்துக்கொண்டு போகாமலிருக்க, மற்ற நாய்களைக் கண்டு உறுமாமல் இருக்க, வாகனங்களைத் துரத்தாமல் இருக்க, நாய்களைப் பழக்கப்படுத்த முடியும். ஆனால், வெகு சிலரே இதற்கு நேரம் செலவழிக்கிறார்கள். பலரும் பயிற்சி ஏதும் கொடுக்காமல், அது தொல்லை செய்கிறது என்று சொல்லிப் பேசாமல் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அதுவோ குலைத்துக்கொண்டேயிருக்கும்.
ஆடுமாடுகளைக் கட்டி வைக்கிறோமே நாயைக் கட்டி வைத்தால் என்ன என்று நினைக்கிறார்கள் போலும். இது ஒரு தவறான குறுக்கு வழி. இதனால்தான் பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் நாய் வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அப்படியே சில இடங்களில் அனுமதித்தாலும், அந்த நாய்களுக்கு எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாததால் சீக்கிரமே உடல்நலம் குன்றுகிறது. இந்தியாவில் வளர்ப்பு நாய்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சினை உடல் பருமன் என்கிறார் எனது நண்பரான விலங்கு மருத்துவர் ஒருவர். கிராமப்புஙகளில் நாய்களை கட்டிப்போட்டு வைப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அதேபோலத்தான் நாய்க்கு உணவு கொடுப்பதும். சில வீடுகளில் நாயை நடமாடும் குப்பைத்தொட்டி போலப் பாவித்து, மிச்ச மீதி சாப்பாட்டைப் போடுவார்கள். மரக்கறி உணவுப் பழக்கம் கொண்ட சிலரோ, தங்கள் மதிப்பீட்டைப் பாவம் நாய் மீதும் திணித்துவிடுவார்கள். அடிப்படையில் நாய் ஒரு ஊனுண்ணி - இறைச்சி உண்ணும் உயிரினம். அதற்கேற்ப அதன் உணவுப்பாதை மிகவும் குறுகியது. அதன் கோரைப் பற்களும் அதற்கான அடையாளமே. அதற்கு மரக்கறி உணவு மட்டுமே போடுவது கொடுமை. இப்போதுதான் குளிகை வடிவில் நாய் உணவு கிடைக்கிறதே, அதை வாங்கிக் கொடுக்கலாம். பதிலாக வெறும் தயிர்சாதத்தைப் போட்டு வளர்த்தால், அது உயிரோடு இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. முதுபெரும் இயற்கையியலாளரான எம்.கிருஷ்ணன், தான் தீவிர சைவமானாலும் வளர்த்த நாய்க்குத் தோட்டத்தில் கறி சமைத்துப் போடுவதை நான் பார்த்திருக்கிறேன். விலங்குகளைத் தீவிரமாக நேசித்தவராயிற்றே!
சரி, செல்லப் பிராணி வளர்ப்பை நாம் எவ்வாறு அணுகுகிறோம்? பல காரணங்களுக்காக நாய் வாங்குகிறோம். குழந்தைகள் கேட்டார்கள் என்று; காவலுக்கென்று. ஆனால், அதன் கூடவே வரும் பொறுப்பைத் தட்டி கழித்துவிடுகிறோம். இதன் ஒரு முக்கிய விளைவு என்ன தெரியுமா? உலகிலேயே தெருநாய்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். வெறிநாய்க் கடிக்கு மக்கள் உயிரிழப்பதிலும் நம் நாடுதான் முதலிடம் வகிக்கிறது.
பெண்  நாய்க்குக் கருத்தடை செய்யாமல் விட்டு விட்டு, அது குட்டி போட்ட பின் என்ன செய்வதென்று தெரியாமல், அவற்றைப் பூங்கா போன்ற பொது இடங்களில் கொண்டு போய் விட்டுவிடும் ஆட்கள் சிலர் நம்மிடையே இருக்கிறார்கள். இன்னும் சிலரோ தெருநாய்களுக்குச் சோறு போடுவார்கள். ஆனால் அவற்றுக்கு வெறிநாய்க் கடிக்குத் தடுப்பூசி போடவோ, கருத்தடை செய்யவோ எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.

நாய்க்காகச் சிறிது நேரம் செலவழித்து, அதைப் பழக்கப்படுத்தி வளர்த்தால், பிரச்சினை இல்லாமல் நம் இல்லத்தில் ஒருவரைப் போலவே வாழும். குறிப்பாக முதியவர்களுக்கு அது ஓர் அன்பான துணை.
நாய் வளர்ப்பில் ஒரு அடிப்படை விதி, நம் நாய் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக இருக்கக் கூடாது. அதற்காக நாய் பழக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.                                                                   
 திருநெல்வேலியிலிருந்து ஒன் தமிழ் நியூஸ் செய்தியாளர் சுப்பையா                             
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo