Onetamil News Logo

போதை பொருள்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்,இந்தியா ஆதரவு

Onetamil News
 

போதை பொருள்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்,இந்தியா ஆதரவு


வியன்னா ;மிகவும் ஆபத்தான போதை பொருள்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை ஐக்கிய நாடுகள் சபை நீக்கி உள்ளது. இதற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன கஞ்சாவை ஆபத்தான பொருள்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. கஞ்சாவை வேறு பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசளித்துள்ளது. கஞ்சாவை பட்டியில் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை எனினும் கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதாரமாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்து உள்ளன. ஏற்கனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில் ஆபத்தான பொருள்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சாவுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளனர் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo