Onetamil News Logo

கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடக்கம் ;4-ம் கட்ட அகழாய்வின் போது கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை 

Onetamil News
 

கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடக்கம் ;4-ம் கட்ட அகழாய்வின் போது கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை 


திருப்புவனம்,2019 செப் 29 ;கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடக்கம் ;4-ம் கட்ட அகழாய்வின் போது கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்து ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பழங்கால தமிழர்களின் நாகரிகம், கட்டுமானம், பொருளாதார நிலை, கல்வி அறிவு, தொழில் குறித்து அறிந்துகொள்ளும் சான்றாக கீழடியில் கிடைத்த பொருட்கள் அமைந்துள்ளன. இதில் 4-ம் கட்ட அகழாய்வின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ந்ததில் அவை கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்தன.
தமிழக அரசு கடந்த வாரம் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து கீழடி மீது உலகளாவிய வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட நாள்தோறும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள், அதிகாரிகள், வெளிநாட்டினர் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

அகழாய்வுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.. ஒவ்வொரு குழியிலும் எந்தெந்த பொருட்கள் எடுக்கப்பட்டன? அதன் சிறப்புகள் என்னென்ன?  போன்றவை மக்கள் அறிய வேண்டும்.
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர், உறைகிணறு, வட்டச்சுவர், சுடுமண் குழாய், செங்கற்களால் ஆன தரைத்தளம், வட்ட பானை ஆகியவற்றையும் பார்வையிட்டார். அகழாய்வு பணிகளை பார்வையிட ஏராளமான மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். இதேபோல் அகழாய்வுக்காக குழிகள் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

தமிழர்களின் வரலாற்று பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருப்பது பெருமைக்குரியது. கீழடியால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை. இங்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகத்தினர், இது போன்ற தொல்லியல் ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சியில் மத்திய-மாநில அரசுகள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எவ்வாறு சிறப்புற்று வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு எடுத்துக்கூறும் விதமாக தங்கம் மற்றும் இரும்பு, ஓடுகளில் இருக்கக்கூடிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் சனவுலி மற்றும் குஜராத் மாநிலத்தில் அகழாய்வு நடந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, இங்கும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் 
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு அகழாய்வு செய்யப்பட்டது. அங்கும் தொடர்ந்து அகழாய்வு நடத்த வேண்டும் 
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்கப்பட்டது என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்திய வரலாறு தமிழகத்தில் இருந்துதான், அதுவும் கீழடியில் இருந்துதான் தொடங்கி இருக்கிறது என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் உடனடியாக மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo