Onetamil News Logo

தூத்துக்குடி புதிய துறைமுகப்பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக இனிகோ நகர் மீனவர்கள் குற்றச்சாட்டு 

Onetamil News
 

தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக இனிகோ நகர் மீனவர்கள் குற்றச்சாட்டு 


தூத்துக்குடி  2020 செப் 18 ;தூத்துக்குடி புதிய துறைமுகப்பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக இனிகோ நகர் மீனவர்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.
 சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது..தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி  மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. 
மீன் பிடி வலை என்பது மீன் பிடிக்கப் பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது சிறுதொழில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மீனவர்கள் பல மீன் இனங்களில் சிலவற்றை மட்டும் பிடிப்பதற்கு ஏற்ப பல வகையான வலைகளைப் பயன்படுத்திப் பிடித்து வந்தனர் அவற்றில் எடுத்துக்காட்டுக்குச் சில - வீச்சு வலை, சாட்டு வலை, பெரிய வலை, மணி வலை, பரு வலை, சூடை/மத்தி வலை, நண்டு வலை ,சுருக்குமடி வலை போன்ற வெவ்வேறு வலைகளை வைத்து மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.   
சுருக்குமடி வலை தீமைகள் ;                                                                                சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் அதிக மீன்கள் கிடைக்கும். இதனால் அதிக லாபம் ஈட்ட முடியும். இதனால், சாதாரண வலை பயன்படுத்தும் நாட்டுப்படகு மற்றும் பாரம்பர்ய படகு மீனவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கிறது.
கரையிலிருந்து இழுக்கும் கரைமடி வலையின் அடுத்த பரிணாமம்தான் இது. கடலில் உள்ள நீரோட்டங்களுக்கு தகுந்த வகையில் இவ்வலை வீசப்படுகிறது. இவ்வலையின் விலை மிக அதிகம். சாதாரண மரப்படகில் இதனை கொண்டு செல்ல முடியாது. ஃபைபர் படகு போன்ற விலையுயர்ந்த படகுதான் சரிப்பட்டுவரும். ஏனென்றால் ஒரு வலையின் எடை 10 டன் வரை இருக்கும்.இந்த வலையை சுமார் 40 பேர் வரை கூட்டாக சேர்ந்துதான் மீன்பிடிக்க முடியும். ஒருமுறை வலையை வீசி அதிக மீன்களை அள்ளி வருகின்றனர் மீனவர்கள். இவ்வகை வலைகளில் மீன் பிடித்தால் அதிக லாபம் கிடைப்பதால் மீனவர்கள் இதை அதிகம் பயன்படுத்த முன் வருகின்றனர். சாளை, அயிலை, வேளா மீன்கள் அதிகமாக சிக்கும். கூட்டமாக சுற்றும் மீன்களில் ஒன்று கூட மிஸ் ஆகாமல் பிடிக்க இந்த வலை பயன்படுகிறது.
சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் என்பதால் இதற்கு சுருக்குமடி வலை என பெயர். கடலின் அடியில் 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடிவலையை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். ஒரு வேளை மீன்கள் இவ்வலையை கிழிக்க முயன்றால் உடனடியாக அதற்கு இணையாய் மற்றொரு வலையை போட்டு மீன்களை லாவகமாக பிடிக்க முடியும்.
சுருக்குமடி வலை மற்றும் படகு வாங்க ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். சுருக்கு வலை படகில் சுறா வலை, மத்தி வலை என இருவகை வலைகள் பயன்படுத்தப்படுகிறது. மத்தி வலையில் சிறிய மீன்களான அயிலை, கானாங்கத்த, நெய்மீன், வேளா போன்ற மீன்கள் சிக்கும். ஒரு வலையின் மதிப்பு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் ஆகும். தமிழகத்தின் தென்கடலில் வாடைக் காற்றுக் காலங்களில் மட்டுமே இந்தச் சுருக்குமடித் தொழில் நடக்கிறது. சுருக்குமடியில் நீரோட்டம் சார்ந்து, மீன்சாய்வு சார்ந்து லட்சக் கணக்கில் மீன்பாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறையில் மீன்பிடித்தல் என்பது காற்றையும் கடலையும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் அறிந்த பாரம்பரிய மீனவரைத்தவிர, சாதாரண தொழில்முறை மீனவராலோ, வணிக மீனவராலோ செய்ய முடியாத தொழில் ஆகும். இதில் மீன்பிடிக்க வள்ளத்துக்கு ஆறு நபர்களோ, எட்டு நபர்களோ சேர்ந்து, இரண்டு வள்ளங்கள் இணைந்து செய்யும் கூட்டுத்தொழில். வாணிவாடும், வாடைக் காற்றும் இருக்கும் காலங்களிலேயே பரந்த கடலில் இடம்பெயரும் இந்த மீன் கூட்டம் கரையிறங்கும். கரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து கடல் மைல்களுக்கு உள்ளாகவே பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பிலேயே நடக்கும் இந்தத் தொழில், காற்றுமாறி சோழக் காற்றும், சோணிவாடு நீரோட்டமும் வந்தால் இல்லாமலாகிவிடும். மீன்கள் ஆழ்கடல் நோக்கிப் போய்விடும். கடலில் மாப்பு (மீன் கூட்டம்) வருவதைக் கரையிலிருந்து பார்த்த பிறகுதான், வள்ளங்களை இறக்கி மடி வளைத்து மீன் பிடிப்பார்கள். நெத்திலிக்கு சாளை இணை மீன், ஒன்றை ஒன்று சாப்பிடுவதில்லை. ஆனால், இவற்றைச் சாப்பிடுவதற்காக பாறையும், சூரையும், கெழுதும் துணைமீன்கள். கூட்டம் அவற்றின் பின்னாலேயே வரும். இந்தச் சுருக்குமடி மீன்பிடித் தொழில் என்பது மேலெழும்பி வரும் மீன்களை விரட்டிப் பிடிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்பம் ஆகும். இது. அந்தக் காலத்தில் கடற்கரை ஊர்களில் நடைமுறையில் இருந்த குத்துவலை அல்லது கரைமடி என்பதன் அடுத்த கட்டம் ஆகும் 
தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில், மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அதன் மூலம், கடலூர் மாவட்ட கடல் பகுதியிலும் மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமூகமான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை மீறி, யாரேனும் தூத்துக்குடி  மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை மற்றும் அதிவேகதிறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்த முயன்றாலோ சுருக்குமடி வலையை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என்பது நியதி ஆனால் இதுவரை செயல்படுத்தப் படவில்லை.இனிமேலாவது செயல்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo