Onetamil News Logo

தூத்துக்குடி அருகே இன்னோவா கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலி 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே இன்னோவா கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலி 


தூத்துக்குடி  2020 செப் 16 ;தூத்துக்குடி அருகே இன்னோவா கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார்.  
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சப்பானி மகன் முருகேசன் (57), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு கம்பெனி வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வாகைக்குளம் சந்திப்பில் இறங்கி அவர் நடந்து சென்றபோது, தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த நாராயணன் மகன் செல்வம் என்பவர் ஓட்டி வந்த இன்னோவா கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo