Onetamil News Logo

அதிவேக நினைவாற்றலுக்கு உதவும் கருவி கண்டுபிடிப்பு 

Onetamil News
 

அதிவேக நினைவாற்றலுக்கு உதவும் கருவி கண்டுபிடிப்பு 


தூத்துக்குடி டிசம்பர் 22; மாணவர்கள் கல்வி பயிலும் போது வெளிப்புற சத்தங்கள் மற்றும் இடையூறுகளினால் அவர்களின் கவனம் சிதறி சரியாக கல்வி கற்க முடியவில்லை இவர்களின் கற்கும் திறனை ஒருமுகப்படுத்த வேண்டும் என எண்ணி செல்போன் உதவியுடன் மாணவர்கள் படிப்பதை துள்ளியமாக பதிவு செய்து அவர்களின் அறிவுக்கு நேரடியாக புரியும் வகையில் ஒரு கருவியை தூத்துக்குடி விஞ்ஞானி மு.முருகன் உருவாக்கியுள்ளார்.
      இக்கருவி திருநெல்வேலி, அறிவியல் மையத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்பிற்கான கண்காட்சியில் மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.  மனோன்மணியம் சுந்தரணார் பல்கலைக்கழக துணைவேந்தர்  டாக்டர் பாஸ்கர் இக்கருவியை சோதனை செய்து விட்டு நன்றாக செயல்படுவதாக பாராட்டினார், அறிவியல் மையத்தின் சான்று வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரம் புது டெல்லியில் நடைபெற்ற டைகான் கண்காட்சியில் பையோ இன்னோவேசனில் வைக்கப்பட்டிருந்த இக்கருவியை மத்திய தொழில் துறை அமைச்சக செயலாளர்   ரமேஷ் அபிஷேக்  பார்த்து பாராட்டியுள்ளார்.
இக்கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியும் பொருட்டு பெங்களுரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்டுயூட் ஆப் சயின்ஸ்-ல் இருக்கும் மூளை மற்றம் நரம்பியல் ஆராய்ச்சித்துறை ஆராய்சியாளர்  சுந்தர் கூறும் போது.
மனித மூளைக்கு கோடிக்கணக்கான நரம்புகள் மூலம் தகவல்கள் எடுத்துச் செல்லப்பட்டு நொடியில் தீர்மானித்து அதற்கேற்ப செயல்படுகிறது.  இக்கருவி தரும் ஒலிஅலைகள், அதிர்வலைகளாக மாற்றப்பட்டு மூளை நரம்புகளின் சந்திப்பின் மூலமாக மூளை வேகமாக புரிந்து கொள்கிறது.  இதன் மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிப்பதாக கூறியுள்ளார்.
இக்கருவி நம்முடைய சத்தத்தினை அதிர்வலையாக மாற்றி பற்கள் மூலம் மூளைக்கு விரைவாக எடுத்துச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo