மங்களகிரி செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பல் சமய மன்ற விழா
புதுக்கோட்டை, மார்ச் -18 ;புதுக்கோட்டை அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பல் சமய மன்ற விழா நடந்தது.
இவ்விழா ஒன்பதாம் வகுப்பு மாணவிகளின் பாடலுடன் கூட்டம் ஆரம்பித்தது.இவ் விழாவிற்கு பள்ளியின் தாளாளர் முதல்வர்அருட் தந்தை முனைவர் ரூபர்ட் தலைமை வகித்தார். விழாவில் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அந்தோணியார் புரம் பங்குத்தந்தை ஜீவன் மரியதாஸ் இந்து சமயத்தை சேர்ந்த செக்காரக்குடியைச் சேர்ந்த லட்சுமண ப்பெருமால், இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த மௌலவி அப்துல் அழிம் ஆகியோர்கள் பல் சமய மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மதங்கள் என்றும் மனித உறவுகள் மேம்பட போதிக்கின்றன என்றும் அன்பு மட்டுமே சமய சகிப்புத்தன்மைக்கு தீர்வு என்று விளக்கமளித்தனர். இக்கூட்டம் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தின் போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்கள் குரு நாடகம் நடன நிகழ்ச்சிகள் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. ஒன்பதாம் வகுப்பு மாணவி சோபியா யுவாஞ்சலின்நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராணி வழிகாட்டி மில்ரோஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.