சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் விழா தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையை தேசிய பசுமை படை மாணவர்கள் மூலம் தூய்மை படுத்தப்பட்டது.
தூத்துக்குடி 2023 செப் 16 ;சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் விழா தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று நடந்தது. உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை மூலமாக தமிழ்நாடு முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் உள்ள 14 கடற்கரைகள் இன்று தூய்மைப்படுத்தப்பட்டது. தூத்துக்குடியிலும் முத்துநகர் கடற்கரை தூத்துக்குடி தேசிய பசுமை படை மாணவர்கள் மூலம் தூய்மை படுத்தப்பட்டது. தூத்துக்குடி நகரப் பகுதியில் உள்ள 5 பள்ளிகளில் இருந்து மொத்தம் 250 மாணவர்கள் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,காலை 9 மணி வரை மாணவர்கள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை முழுவதும் தூய்மைப்படுத்தும் அணியில் ஈடுபட்டனர்.இந்தப் பணியில் கிடைக்கப்பெற்ற கழிவு பொருட்கள் ஆன நெகிழி, தூக்கி எறியப்பட்ட மீன் வலைகள் கண்ணாடி துண்டுகள் பேப்பர் ரப்பர் மரக்கட்டை உலோகங்கள் கிழிந்த துணிகள், மருத்துவ கழிவு பொருட்கள் போன்ற பொருட்களை தரம் வாரியாக பிரித்து தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கப்பட்டது.
இந்தப் பணியில் தமிழ்நாடு முதலமைச்சர் கிரீன் வெள்ளூர் உறுப்பினர் குமாரி ராகினி கலந்து கொண்டார். இதில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் எஸ் வெள்ளைச்சாமி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.