தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சர்வதேச அறிவியல் கருத்தரங்கம்
தூத்துக்குடி 2023 மார்ச் 24 ; தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் ஏ பி சி வி சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பால சண்முக தேவி தலைமை உரை வழங்கினார். முதுகலை மற்றும் வேதியியல் ஆராய்ச்சித்துறை தலைவர் முனைவர் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார். தொழில்நுட்ப ஆதரவு மையம் துறை தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆரோக்கியதாஸ் நோக்க உரை வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் பொறியியல் பள்ளி முனாஸ் பல்கலைக்கழகம் மலேசியா,முனைவர் என் எஸ் கே கௌதமன், சிறப்புரை வழங்கினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சண்முக பிரியா நன்றி உரை வழங்கினார்.
முதல் கட்ட அமர்வில் அறிவுசார் சொத்து உரிமைகளின் புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளை பற்றி ஆரோக்கியதாஸ் தெளிவாக விளக்கினார். இரண்டாம் கட்ட அமர்வில் கார்பனின் குவாண்டம் பள்ளிகள் மற்றும் பொருளாதார பயன்பாடுகள் பற்றி என் எஸ் கே கௌதமன் எடுத்துரைத்தார். மூன்றாம் கட்ட அமர்வில் மூத்த முனைவர் பட்ட ஆய்வாளர் போஸ்டர் தென்கொரியா வேதியியல் அதி மூலக்கூறுகளின் அணுகுமுறை பற்றி பொன் சதீஷ்குமார் விளக்கினார். பின்பு நிறைவு விழாவின் போது வேதியியல் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியர் முனைவர் யோகேஸ்வரி நித்யா வரவேற்புரை வழங்கினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சங்கரவடிவு நன்றியுரை வழங்கினார். இதில் 242க்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை மாணவியர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வேதியல் துறையைச் சார்ந்த இடங்களை மற்றும் முதுகலை ஆராய்ச்சி துறை மாணவிகளும் பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.