மாப்பிள்ளையூரணி ஊராட்சிப்பகுதியில் பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம்,மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி 2023 மார்ச் 18 ;மாப்பிள்ளையூரணி ஊராட்சிப்பகுதியில் பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம், நடைபெற்றது!.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிப்பகுதியில் பெண்கள் இணைப்பு குழு சார்பில் அகில உலக பெண்கள் தினம், மேல அலங்காரத்தட்டு பாண்டியாபுரத்தில் நடைபெற்றது.முன்னதாக பெண்கள் கும்மி அடித்தும் சிறுமிகள் பரதநாட்டியம் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.
இந்த விழா தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வி தலைமையில் பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்தி முன்னிலையிலும் நடைபெற்றது.
பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய்,மேல அலங்காரத்தட்டு ஊர் தலைவர் கிருஷ்ணன், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ் பி மாடசாமி,ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன்,3வது வார்டு கவுன்சிலர் பாரதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக கிழக்கு ஒன்றிய செய்யலாளரும்,கூட்டுறவு வங்கித் தலைவருமான,மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக் குமார், கலந்து கொண்டு பேசியதாவது..... பெண்களுக்கு எதுவும் பிரச்சினை என்றால் என்னை எப்போதும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் உங்களுடன் ஒரு சகோதரனாக உடன் இருப்பேன் என்று கூறினார்.
இந்த விழாவில் மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு சக்தி பேசுகையில் பெண்களும் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பெண்கள் காவல் நிலையங்களுக்கு செல்லும் பொழுது எந்த வித அச்சமும் இன்றி துணிச்சலாக செயல்பட வேண்டும் எனவும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்,அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க் இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். என கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சி முடிவில் மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு அந்தோணியம்மாள் நன்றி உரையாற்றினார்.இந்த விழாவில் பெண்கள் இணைப்பு குழு (கோவில்பட்டி)ஒருங்கிணைப்பாளர் மேரி ஷிலா, மேல அலங்காரத்தட்டு பெண்கள் இணைப்பு குழு சந்தணம், மாப்பிள்ளையூரணி வார்டு உறுப்பினர் பாரதிராஜா, ஆழ்வார்குறிச்சி பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுலோச்சனா, களக்காடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி,மேல அலங்காரத் தட்டு கவிதை பெண்கள் இணைப்பு குழு அனுசியா, கீழ அலங்காரத்தட்டு பாடல் குழுவினர் பெண்கள் இணைப்பு குழு ரோஸ்லின் அமுதா, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மகளிர் கலந்து கொண்டனர்.