Onetamil News Logo

மழைக்காலம் வரும் முன்னர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்த  முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி 

Onetamil News
 

மழைக்காலம் வரும் முன்னர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்த  முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா பேட்டி 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடியில் மழைக்காலம் வரும் முன்னர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும்,உப்பாறு ஓடை ,தார் சாலை பணிகள் குறித்தும்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாய பிரதிநிதிகள்   முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் மிக கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளமும் நகருக்குள் புகுந்தது. மாநகரம் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது. இந்த தண்ணீரை வெளியேற்ற 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவில் மழை இல்லை. தெருக்களில் தண்ணீர் தேங்கிய போதிலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.  தூத்துக்குடியில் ஒவ்வொரு மழைக்காலத்திலும்  குடியிருப்புகளைச் சுற்றி பல நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தூத்துக்குடி மக்கள் அவதிப்படுவது உண்டு.  
கடற்கரையோரம் அமைந்திருப்பதாலும், மாநகரின் சில பகுதிகள் பூகோள ரீதியாக கடல் மட்டத்தைவிட சற்று தாழ்வாக இருப்பதாலும் தூத்துக்குடி மாநகரத்தில் இருந்து மழைநீர் வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது. இதனால், சிறு அளவு மழை பெய்தாலே குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். இதனால், நகரில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது என்பது பெரும் சவாலாக உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து, மாநகராட்சி பகுதியில் பெருமழை காலத்தில் வெள்ளநீரை வெளியேற்ற ரூ. 937 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் தயாரிக்கப்பட்டது. மூன்று கட்டங்களாக இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 96.12 கோடியில் 6 பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், நகருக்கு வெளியே இருந்து நகருக்குள் வரும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து கால்வாய்கள் அமைத்து கடலுக்கு திருப்பி விடும் பணி முக்கியமானதாகும். மேலும், நகருக்குள் வரும் தண்ணீரை சேமித்து வைக்க சி.வ.குளத்தை ரூ.11.50 கோடியில் தூர்வாரி சீரமைத்தல் பணியும் இதில் அடங்கும். இப் பணிகளை 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பணிகள் இதுவரை  முடிவடையவில்லை.
தூத்துக்குடி மாநகரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. வடிகால்களை முறையாக தூர்வார வில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
2019 ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது: தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் திட்டம் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இவ்விரு திட்டங்களையும் 100 சதவீதம் முடித்தால் மழைநீரை வெளியேற்ற வசதியாக இருக்கும்.இவ்வாறு  ஆட்சியர் கூறியிருந்தார். 
இந்த நிலையில் மழைக்காலம் வரும் முன்னர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும்,உப்பாறு ஓடை ,தார் சாலை பணிகள் குறித்தும்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்களிடம் தெரிவித்துள்ளோம். என்று முள்ளக்காடு, முத்தையாபுரம் ,அத்திமரப்பட்டி கிராம விவசாயிகள் சங்கத் தலைவர் அழகுராஜா,செய்தியாளர்களிடம் கூறியதாவது.....
1.விவசாயத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கவும்,
2.அயன்காடு புதிய தார்சாலை தூத்துக்குடி மாநகராட்சி மூலம் நிறைவேற்றவும்,
3.உப்பாறு ஓடைவேலையை மழைகாலத்திற்கு முன் விரைந்து முடிக்கவும்,
4.அரசு உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிடவும்,மாவட்ட ஆட்சியர் நமக்கு உறுதியளித்துள்ளார்கள். 58.5 கோடி உலக வங்கி நிதியைத் தந்திட உத்திரவாதம் அளித்துள்ளார்கள்!
ஆர்வத்தோடு அனைத்துக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்த்து, இன்முகத்தோடு-புன்முறுவலோடு நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்ட,நமது மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என்று நம்மிடையே தெரிவித்தார். இந்த நிகழ்வில் உப்பாற்று ஓடை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ,விவசாயச்சங்கச் செயலர் சேகர்,சங்க நிர்வாகி திருமால், சங்க நிர்வாகி ரகுபதி,3ம் நம்பர் மடைத் தலைவர் முத்துத்தங்கம்,ஆகியோர் உடனிருந்தார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo