Onetamil News Logo

சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் -க்கு பாராட்டு ;சிப்காட் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Onetamil News
 

சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் -க்கு பாராட்டு ;சிப்காட் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ்  கைது 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 21 ;தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளார்.
   தூத்துக்குடி, சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் நந்தகுமார் (42). இவரை கடந்த 22.09.2020 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த வேதமுத்துராஜ் மகன் ஜார்ஜ்(48) மற்றும் அவரது நண்பரான விளாத்திகுளம் வேடபட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளையராஜா(39) ஆகிய இருவரும் சேர்ந்து நந்தகுமாரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் இருவரையும் கைது செய்தனர். மேற்படி வழக்கின் முக்கிய எதிரியான ஜார்ஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின்  அறிக்கையின் அடிப்படையில் எதிரி ஜார்ஜ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.  
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரியான ஜார்ஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்  முத்து சுப்பிரமணியன் எதிரி ஜார்ஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo