Onetamil News Logo

சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் காப்பாற்ற, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும் நடுவண் அரசும் தமிழக அரசும் கூட்டுச் சதியா?

Onetamil News
 

சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் காப்பாற்ற, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும் நடுவண் அரசும் தமிழக அரசும் கூட்டுச் சதியா?



தூத்துக்குடி 2020 செப் 26 ; சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் காப்பாற்ற,  அரசு முயற்சித்து வருகிறது. இச்சூழ்நிலையில் இன்று நீதிமன்றத்தில் 9 காவல் அதிகாரிகள் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவையே உலுக்கிய கொடூரமான காவல் சித்திரவதை வழக்கில் ஈடுபட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கக்கூடாது. தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டிய வேகமும், தொடர் கண்காணிப்பும் தற்போது இல்லை. காவல் படுகொலை நிகழ்ந்த உடன் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக எழுப்பப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமல் அப்படியே இருக்கின்றன.
தமிழக காவல் துறைத் தலைமை இயக்குனர், தென்மண்டல காவல் துறைத் தலைவர், தென்மண்டல காவல் துறைத் துணைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது தொடர் அலட்சியப் போக்காலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும், அதன் துணைக் காவல் கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக காவல் சித்திரவதைகளும், காவல் படுகொலைகளும் நடந்து வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஊட்டுவதாக அமைகிறது.
சாத்தான்குளம் துணைக் கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மார்ட்டின் என்பவரை சாத்தான்குளம் காவலர்கள் காவலர் குடியிருப்பில் இரும்புச் சங்கிலிகளால் கட்டிவைத்து நடத்திய சித்திரவதை, தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினரின் உதவியோடு செல்வம் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது என அடுத்தடுத்த சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகேந்திரன் படுகொலை வழக்கும், ராஜா சிங் மீதான கொடூரமான காவல் சித்திரவதை வழக்கும் மேற்படி காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தொடர் கண்காணிப்பு முழுமையாக இவ்வழக்குகள் மீது இல்லாததால் மேலும் மேலும் அப்பகுதிகளில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் அதிகரிக்கின்றன. இது தவிர கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே தென்காசி மாவட்டத்தில் அணைக்கரை முத்து வனத்துறை காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார், சென்னையில் போலி மோதல் சாவு மூலம் காவல்துறையினரால் சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலையத்தில் ரமேஷ், திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல்நிலையத்தில் மணிகண்டன்  ஆகியோர் காவல் படுகொலையால் மரணமடைந்துள்ளனர்.
சாத்தான்குளம் கொலைக் குற்றவாளிகளான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 8 பேரையும் கொலை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க நடுவண் அரசும் தமிழக அரசும் கூட்டுச்சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழும்புகிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர் வழக்கு புலன் விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. வழக்கை விசாரிக்க வந்த 8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமணையில் சிகிச்சை மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இவை அனைத்துமே இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதற்காகவும் கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்க மேற்கொள்ளப்பட்ட யுத்திகளாக இருக்குமோ என்ற சந்தேகம் பொது மக்களிடம்  வலுக்கிறது.
எனவே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறது.
கோரிக்கைகள்:
காவல் சித்திரவதை வழக்குகளில் அலட்சியத்தோடும் பொறுப்பற்ற தன்மையோடும் இருக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு. திரிபாதி உடனே பதவி விலக வேண்டும்.
·        சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கில் கூடுதல் கண்காணிப்போடு செயல்பட வேண்டும்.
·        சாத்தான்குளம் காவல் படுகொலைகளுக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
·        சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனே அவர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
·        சாத்தான்குளம் முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் தூத்துக்குடி கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் மீது முறையான விசாரணை தொடங்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
·        சாத்தான்குளம் காவல் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை நண்பர்கள் (Friends of Police) அனைவரும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்கள் அத்தனை பேர் மீதும் கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
·        மார்ட்டின் காவல் சித்திரவதையில் தொடர்புடைய சாத்தான்குளம் காவலர்கள் மீது உடனே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
·        செல்வம் கொலை வழக்கில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் அரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.
·        சாத்தான்குளம் தற்போதைய காவல் துணைக் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
·        ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவமணை

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo