Onetamil News Logo

வள்ளியூர்- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? - கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்!

Onetamil News
 

வள்ளியூர்- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? - கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்!


டெல்லி 2020 மார்ச் வெள்ளி 20 ;நெல்லை மாவட்டம்  வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரையிலான 64 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக   தரம் உயர்த்தப்படுவதற்கு  கொள்கை அளவில் கண்டறியப்பட்டுள்ளதாக  மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவைத்  தொகுதி எம்பியுமான கனிமொழி  எழுத்துமூலம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதை மத்திய அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
“வள்ளியூர்- திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா?  அப்படியென்றால் அதன் தற்போதைய நிலை என்ன?” என்று கனிமொழி எம்பி எழுத்துமூலம் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “ தற்போது மாநில நெடுஞ்சாலையாக இருக்கும்  வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரையிலான  64 கி.மீ சாலையை கொள்கை அளவில் தேசிய  நெடுஞ்சாலையாக ஆக்க   அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்துவதற்கான  சாத்தியக் கூறுகளை ஆராயும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.  
இந்த விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து, இணைப்பு, தொழில்நுட்ப பொருளாதாரக் கூறுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து இறுதி செய்த பிறகு... மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம்  உயர்த்தப்படும்” என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo