Onetamil News Logo

101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்து வைத்துள்ளதாக பரவும் தகவல் உண்மையா?   

Onetamil News
 

101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்து வைத்துள்ளதாக பரவும் தகவல் உண்மையா?           


 உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
              உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்து வைத்துள்ளதாக பரவும் தகவல்
“நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை. இது வரை 200 கும் அதிகமான காமராஜர் சிலைகளை நம் பாரத பிரதமர் மோடி,அரசு திறந்து வைத்துள்ளார். இதை ஊடகங்கள் மறைத்து வருகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
         சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து 
  ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?
                உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்துள்ளதாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். முன்னதாக சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் காமராஜர் சிலை ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா என்று தேடினோம். ஆனால் இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
          இதனையடுத்து வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம். இத்தேடலானது flickr இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இத்தளத்தில்  ரமேஷ் நாயர் என்பவர் சென்னை மெரினாவில் இருக்கும் காமராஜர் சிலை என்று குறிப்பிட்டு வைரலாகும் படத்தை ஆகஸ்ட் 2, 2009 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
        உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்து வைத்துள்ளதாக பரவும் தகவல் - 
இதனையடுத்து கூகுள் மேப்ஸ் மூலம் சென்னை மெரினாவில் இருக்கும் காமராஜர் சிலையை கண்டறிந்தோம். அச்சிலையானது வைரலாகும் படத்தோடு ஒற்றுப்போவதை நம்மால காண முடிந்தது.
          உத்திரப் பிரதேசத்தில் 101 அடி காமராஜர் சிலையை யோகி அரசு திறந்து வைத்துள்ளதாக பரவும் தகவல் உண்மையா?
              உத்திரப் பிரதேசத்தில்  காமராஜர் சிலை திறந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதும், வைரலாகும் படத்தில் காணப்படும் காமராஜர் சிலை சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சிலை என்பதும் தெளிவாகின்றது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo