Onetamil News Logo

கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது. ஆசிரியர்கள் மூலமே சமூக பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தரமுடியும்

Onetamil News
 

கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது. ஆசிரியர்கள் மூலமே சமூக பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தரமுடியும்


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 14 ;ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை குறைவாகவே கற்றது. மனிதன் நாகரீக வளர்ச்சியில், மற்றும் முன்னேற்றத்தில் சேர்த்து வைத்த அனுபவம், அறிவு, இதானால் கல்வியின் வளர்ச்சியும் அதிகமாக தேவைப்பட்டது.
சமூகத்தில் ஓர் ஆற்றல் மிக்க உறுப்பினராக விளங்கவேண்டுமானால் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்க வேண்டும். அதாவது மனிதன் ஒரு கவிஞனாகவோ, தத்துவமேதையாகவோ, ஒரு நல்ல ஆசிரியாராகவோ, ஒரு திறமை வாய்ந்த மனிதனாகவோ வளரக் கல்வி மிகவும் அவசியம். எனவே, ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகிய சிந்தனைகள் வளர கல்வி அவசியம். ஒரு தனி மனிதனின் திறமைகள், அவன் சமுதாயப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகில் பங்களிப்பை செய்ய கல்வி துணைபுரியும்.     
 கல்வி என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும்.இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் கற்கும்போது முழுமையான பரிமாணம் அடைந்து முழுமையான மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை அளிக்கும்படியும் மாற்றம் அடைகின்றனர்.
இன்றைய நவீன யுகத்தில் கல்விக்கான அனைத்து வாய்ப்பு, வசதிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன திறந்து விடப்பட்டுள்ளன.  ஒருவர், துறையொன்றில் அல்லது பல துறைகளில் ஆழமாக கால் பதிக்க இது வழிவகுத்துள்ளது. சமூக மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு கல்விக்கு உண்டு. சமூகத்திற்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்கள், ஒற்றுமை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல், நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது.
அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது. இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள, மேலும் அதன் சவால்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமாகும். கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும். கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது. பல்வேறு கல்விசார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவது கல்வியாகும். அறிவு, திறமை போன்றவற்றை வழங்கி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை வழங்கி ஒரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக கல்வி மாற்றுகின்றது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சமூக நகர்வு, சமூக வளர்ச்சி, எழுச்சி, அபிவிருத்தி, என்பன அச்சமூகத்தின் கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது.
இன்றைய உலக மாற்றங்களுக்கேற்ப யுனெஸ்கோவின் "Education for all (அனைவருக்கும் கல்வி)" என்ற பிரகடனம் எந்தவொரு நாட்டிற்கும், அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும். ஆர்.எஸ் பீட்டர் குறிப்பிடுகையில்; கல்வியானது பல செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொடர் கரும நடைமுறையாகும் எனக் கூறினார். பிளேட்டோ கூறுகிறார்; கல்வியால் கிடைக்கின்ற நன்மை யாதெனில் நல்ல மனிதர்கள் உருவானது. மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையில் செயலாற்றவும் பழகிக்கிக் கொள்கிறார்கள். ரூஸோ குறிப்பிடுகையில்; பிள்ளைக்கு கல்வியை தனது ஆற்றல்கள் தேவைகள் விருப்பங்கள் என்பவற்றிற்கேற்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்குபடுத்துவதும் மீள அமைப்பதுமாகும். கற்றல் அனுபவம் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது கற்றல் அனுபவத்தை தருகின்றது. அது மாணவரின் உடல், உள, மன வளர்ச்சி உணர்வு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை பெற உதவுகின்றது. கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயற்திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழு வேலை போன்றவற்றில் காணப்படுகிறது. மகாத்மா காந்தி கல்வி பற்றி தனது கருத்தில் கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களில் உச்ச விருத்தி கல்வி மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக் கூறினார்.
நமக்கான சமூகத்தை நேர்மையாக்குவதிலும் நல்லொழுக்கத்திலும் ஆழமான நற்சிந்தனையையும் அகலமான அறிவையும் உறுதிப்படுத்த கல்வி மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது. முழுமையான கல்வி என்பது உடல், உள மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து நற்சிந்தனையுடன் கூடிய செயலை வெளிக் கொணர்வதுதான். கல்வி நம்மனைவருக்கும் வாழ்வின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் வளர்ச்சியின் அணிகலனாகவும் அமைவது கல்வியாகும். சமுதாயத்தில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை, முயலாமை போன்ற ஆமைகளை விரட்டி சமூகத்தை நீதி, நேர்மை மிக்க சமுதாயமாக இயங்க வைப்பதற்கு கல்வி மட்டுமே அடித்தளமாக அமையும். 'கல்வி என்பது ஒரு வரை நிர்வாணமான சிந்தனா சக்தி உடையவராக ஆக்குவது' என்று தந்தை பெரியார் கூறினார்.
கல்வி என்பது நமது பிள்ளைகளின் மூளைக்குள் புதிதாக எதையும் திணிப்பது அல்ல மாறாக குழந்தைகளின் உள்ளத்தில் திணிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி சுய சிந்தனை உடையவராக மாற்றுவதேயாகும். நமது சமூக கட்டமைப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் முக்கோண கோட்பாட்டின் சமூகத்தின் இயல்பாக நிலைநிறுத்துவதே கல்வி தான். தனி மனித பலவீனத்தை அகற்றி தனி மனிதர்கள் சமூகக் கட்டுக்கோப்புக்கு உரியவராக மாற்றும் பணியை கல்வி மட்டுமே முன்னெடுக்கின்றது. வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நமது குணங்களை சீர்படுத்தி மனதை ஆற்றுப்படுத்துகின்றது. மனிதம் நிறைந்த சமூக கட்டமைப்பு உருவாகுவதற்கு சமூகத்துக்கான சமூக உணவாக இருப்பது புத்தகங்கள் மட்டுமேயாகும். வீட்டுக்கொரு நூலகத்தை நாம் முன்னிருத்த வேண்டும். புத்தக வாசிப்பென்பது  சமூக சுவாசமாக மாற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே கல்வியின் மீது கட்டப்பட்ட அறிவார்ந்த சமூகம் உருவாகும்.கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, மன வளர்ச்சி,உணர்வுகளின்வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.
கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயல் திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேலை போன்றவற்றில் இருக்கிறது.மனிதகுலத்தின் வாழ்க்கை ஓயாத மாற்றத்திற்குரியது. மாற்றத்திற்குக் காரணம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு உந்துசக்தி-ஒன்று, காலத்தின் பரிணாம வளர்ச்சி. பிறிதொன்று மாற்றம். மாற்றங்கள் வளர்ச்சிக்குத் துணை; அரண். எந்த ஒன்றும் தேங்கிவிட்டால் அழிந்து விடும், பயனற்றுப் போகும்.
நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி, மனிதகுலத்துக்குப்பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்ற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.
தேங்குவன எல்லாம் குட்டை. குட்டையில் கிடக்கும் தண்ணீர் பயன்படாது. பயன்படாதது மட்டுமின்றி நோயும் தரும். ஆதலால், மனிதகுலம் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சி, மாற்றத்தை உருவாக்கும்.
மனிதகுலம், மாற்றங்களை விரும்பினால் வளர்ச்சி பொருந்திய வாழ்க்கை முறையை அவாவுதல் வேண்டும். இந்த உலகம் எப்படி இருந்தது என்று எவரும் கூறலாம். ஆனால், இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற, சொல்லுகின்ற, அமைக்கின்ற திசையில் மக்கள் செல்லவேண்டும்.
அறிவு தேக்கமடைந்து போனால், உலக வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். அறிவு வளரும் தன்மையது நாள்தோறும் அறிவை வளர்த்துக்கொள்ளும் சமுதாயத்தில்தான் வளர்ச்சிக்கு வழி உண்டு; வாயில்கள் உண்டு. மாற்றங்களும் ஏற்படும்.
வளரும் சமுதாயத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவதே புதுமை. புதுமை செயற்கையன்று. இயல்பாக வாழ்க்கைப் போக்கில்-பரிணாம வளர்ச்சியில் தோன்றும் புதுமைகள். விவாதங்களைக் கடந்தவை. “முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” என்றார் மாணிக்கவாசகர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo