Onetamil News Logo

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு

Onetamil News
 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு


புதுடெல்லி 2019 ஆகஸ்ட் 5 ;காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் அறிவித்தார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
12.45 PM - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படை குவிக்கப்பட்டு, தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், கூச்சல் குழப்பத்துடன் நடந்துவரும் நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார். அவை என்னென்ன என்பது குறித்து சட்டத்துறை செய்தியாளர் சுசித்ரா மொஹந்தி கூறுகிறார்.
1. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்குவதற்கான மசோதா.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.
3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 35ஏ வை நீக்குவதற்கான மசோதா.
4. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் ஆக்குவதற்கான மசோதா.
12.10 PM - ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 370 தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12:19 PM சட்டப்பிரிவு 370ல் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இது ஒரு தைரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று கூறியுள்ளார்.
11:45 AM இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இது - மெஹபூபா முஃப்தி
@MehboobaMufti ; Today marks the darkest day in Indian democracy. Decision of J&K leadership to reject 2 nation theory in 1947 & align with India has backfired. Unilateral decision of GOI to scrap Article 370 is illegal & unconstitutional which will make India an occupational force in J&K.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo