Onetamil News Logo

முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி வீட்டுக்காவல் ;ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு 

Onetamil News
 

முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி வீட்டுக்காவல் ;ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு 



ஸ்ரீநகர்: 2019 ஆகஸ்ட் 5 ;பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து சிறப்புஅந்தஸ்தைரத்து செய்யும்முடிவில் இருப்பதாக தகவல் நிலவுகிறது.வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படும் என தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் மிக அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையடுத்து  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு் ஸ்ரீநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அதன் பின்னர் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது என  தெரிவிக்கப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்லிடப்பேசி, இணையதள சேவை ஆகியவை முற்றிலும் நிறுத்தப்படுள்ளது. 
ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo