Onetamil News Logo

காஷ்மீரில் ராணுவம் தனது வேட்டையை தொடங்கியது ;தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

Onetamil News
 

காஷ்மீரில் ராணுவம் தனது வேட்டையை தொடங்கியது ;தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை 



காஷ்மீர் 2019 ஆகஸ்ட் 3 ; ஜம்மு காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குளிர்காலம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் ஏராளமான தீவிரவாதிகள் ஊடுருவ தொடங்கியிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே காஷ்மீருக்குள் சுமார் 15 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இவர்கள் அனைவருமே பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, அதிநவீன ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் ஊடுருவி இருந்தனர். இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை நடைபெறும் பாதையில் கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், தூரத்திலிருந்து குறி பார்த்து சுட கூடிய நவீன வகை துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ராணுவத்தின் தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. அமர்நாத் பக்தர்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், நேற்று மதியம் முதல் அமர்நாத் யாத்திரை திடீரென ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரில் நடைபெறவிருந்த துர்கா தேவி விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் முதல்கட்டமாக 10 ஆயிரம் துணை ராணுவ படையினரும், இரண்டாவது கட்டமாக 28000 துணை ராணுவப் படையினரும் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். இது தீவிரவாத ஒழிப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கை, என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் விளக்கம் அளித்திருந்தார். இன்று, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சோபியான் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நவீன வகை ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே போதிய விமான வசதி இல்லாமல் காஷ்மீரில் தவித்து வரும் அமர்நாத் யாத்ரீகர்கள் வசதிக்காக, சிறப்பு விமானம் மூலமாக அவர்களை பதன்கோட் மற்றும் டெல்லி நகரங்களுக்கு அழைத்து வர விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது..
 பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதால் காஷ்மீர் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது..இதனிடையே அமர்நாத் யாத்ரீகர்களை கொல்ல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு ராணுவம் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரிலிருந்து வெளியேற அம்மாநில அரசு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது..
ஜம்மு-காஷ்மீரில் 25 ஆயிரத்துக்கும் மேலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உடனே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டது..
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது..
காஷ்மீரில் ஊடுருவ முயன்றதாக ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்..
மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என பிரிட்டன், ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்திருந்தது..
சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு காஷ்மீர் அரசு அறிவித்ததை அடுத்து ஜெர்மன் அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo