ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற 05ம் தேதி அனுசரிப்பு ;அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு
தூத்துக்குடி 2020 டிசம்பர் 3 ;மறைந்த தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம். தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் மறைந்த அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள்.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
மறைந்த தமிழக முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற 05.12.2020 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள்,கழக தொண்டர்கள், மகளிர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி, வட்ட, கிளைக் கழகங்களில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்தினை அலங்கரித்து, அஞ்சலி செலுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.