அமெரிக்க ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் இன்று 46வது அதிபராக பொறுப்பேற்கிறார்.
அமெரிக்க 2021 ஜனவரி 21; உலகின் சக்தி வாய்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்க இருக்கும் 78 வயதான ஜோ பைடனின் மறுபக்கம்.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.
ஒரு கிறிஸ்துமஸ் நாளன்று வெளியில் செல்லும் போது மனைவி மற்றும் மகள் சாலை விபத்தில் மரணம்.மூளை புற்றுநோயால் ஒரு மகன் பலியானார்.
போதை பழக்கத்தால் 2-வது மகனும் தனிமையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.(நேற்று தனது சொந்த ஊரைவிட்டு வரும்பொழுது தனது மகன்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத காட்சி வைரலானது)
பைடனுக்கு முக தசைகள் முடக்கம் (முக வாதம்) இருந்ததாக கூறப்படுகிறது.இவ்வளவு எதிர்மறையான சூழ்நிலைகள் இருந்தும், தனது 78 வயதில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் ஜனாதிபதியாகிருக்கிறார்.50 வயதுக்கு மேல் நாம் ஓய்வை தேடுகிறோம், நேர்மறை எண்ணங்களை விட்டு விடுகிறோம், ஆனால் பைடன் 78 வயதில் ஒரு அற்புதமான, மதிக்க தக்க வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.
அமெரிக்க அரசியல்வாதியும் அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். 2020 அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் டொனால்டு திரம்பைத் தோற்கடித்தார். 2021 சனவரியில் இவர் 46-வது அதிபராக பொறுப்பேற்பார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரான பைடன், முன்னதாக 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47-வது துணைக் குடியரசு தலைவராகவும், 1973 முதல் 2009 வரை டெலவெயர் மாநிலத்தின் சார்பாக அமெரிக்க அமெரிக்க மூதவை உறுப்பினராகவும் பதவியில் இருந்தார்.
பென்சில்வேனியா, இசுக்கிராண்டன், மற்றும் டெலவெயர், நியூகாசில் கவுண்டி ஆகிய இடங்களில் வளர்ந்த பைடன், டெலவெயர் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டத்தில் இளங்கலைப் பட்டமும், பின்னர் 1968 இல் சிரக்கியூசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் 1969-இல் ஒரு வழக்கறிஞரானார். 1970 இல் நியூகாசில் கவுண்டி உள்ளாட்சி சபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார். 1972 இல் தனது 29-வது அகவையில் டெலவெயர் மாநிலத்தில் இருந்து அமெரிக்க மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்க வரலாற்றில் மூதவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாவது இளையவர் என்ற பெருமையையும் பெற்றார். மேலவையின் வெளியுறவுக் குழுவின் நீண்டகால உறுப்பினராக இருந்து, இறுதியில் அதன் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். இவர் 1991-இல் நடத்தப்பட்ட வளைகுடாப் போரை எதிர்த்தார், ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பை விரிவுபடுத்தவும், 1990களில் போர்களில் அமெரிக்கப் பங்களிப்புக்கும் ஆதரவளித்தார்.
2002 இல் ஈராக்கியப் போரை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். ஆனாலும், 2007 இல் ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 1987 முதல் 1995 வரை அமெரிக்க மேலவையின் நீதித்துறைக் குழுவின் தலைவராக இருந்து, போதைப்பொருள் கொள்கை, குற்றத் தடுப்பு குடிமக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாண்டார். வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு மற்றும் சட்ட அமலாக்கச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பைடன் தலைமை தாங்கினார். மேலும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு ராபர்ட் போர்க் மற்றும் கிளாரன்ஸ் தாமஸ் ஆகியோரின் சர்ச்சைக்குரிய வழக்குகளை மேற்பார்வையிட்டார். 1988 மற்றும் 2008 இல் சனநாயகக் கட்சியின் குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கான போட்டிகளில் பங்குபற்றித் தோல்வியடைந்தார்.
பைடன் அமெரிக்க மேலவைக்கு ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் பராக் ஒபாமாவுடன் துணைத் தலைவர் பதவியை வென்ற பிறகு தன் உறுப்பினர் பதவியைத் துறந்தார். அப்போது இவர் 4-வது மிக மூத்த மேலவை உறுப்பினராக இருந்தார். ஒபாமாவும் பைடனும் 2012 தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத் தலைவராக, பைடன் பெரும் பொருளாதாரத் தேக்கத்தைப் போக்குவதற்காக 2009 இல் அமெரிக்க உள்கட்டமைப்பு செலவினங்களை மேற்பார்வையிட்டார். காங்கிரசின் குடியரசுக் கட்சியினருடனான அவரது பேச்சுவார்த்தைகள் ஒபாமா நிர்வாகத்திற்கு 2010 வரி நிவாரணச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை இயற்ற உதவியது, இது வரிவிதிப்பு முட்டுக்கட்டையைத் தீர்த்தது; கடன் உச்சவரம்பு நெருக்கடியைத் தீர்க்க உதவிய 2011 நிதியறிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டம்; மற்றும் 2012 ஆம் ஆண்டின் அமெரிக்க வரி செலுத்துவோர் நிவாரண சட்டம் ஆகியவற்றில் பைடனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க-உருசிய புதிய "ஸ்டார்ட்" ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பைடன் தலைமை தாங்கினார்; லிபியாவில் இராணுவத் தலையீட்டை ஆதரித்தார்; 2011 இல் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் ஈராக்கு தொடர்பான அமெரிக்கக் கொள்கையை வகுக்க உதவியது. சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பைடன் துப்பாக்கி வன்முறைப் பணிக்குழுவை வழிநடத்தியமை, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்கான காரணங்களைக் கண்டறிய உதவியது.. அக்டோபர் 2015 இல், 2016 தேர்தலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பைடன் அறிவித்தார். 2017 சனவரியில், இவருக்கு குடியரசுத்தலைவரின் விடுதலைப் பதக்கத்தை ஒபாமா வழங்கினார்.2019 ஏப்ரலில், 2020 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். 2020 சூனில், கட்சியின் வேட்பு மனினுவைப் பெறுவதற்குத் தேவையான 1,991 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.2020 ஆகஸ்ட் 11 இல், தனது துணைத் தலைவர் வேட்பாளராக கலிபோர்னியாவின் மேலவை உறுப்பினர் கமலா ஆரிசை அறிவித்தார். நவம்பர் 3 இல் நடைபெற்ற தேர்தலில் பைடன் நடப்புத் தலைவர் டிரம்பை வென்றார். இதன் மூலம், 1968 இல் இரிச்சார்ட் நிக்சனுக்குப் பின்னர் துணைத் தலைவராகப் பதவியில் இல்லாத ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்