Onetamil News Logo

உதயநிதி ஸ்டாலின் இதயத்தில் இடம் பிடித்த தூத்துக்குடி மாற்றுத்திறனாளி இளைஞர் ஜஸ்டின்

Onetamil News
 

உதயநிதி ஸ்டாலின் இதயத்தில் இடம் பிடித்த தூத்துக்குடி மாற்றுத்திறனாளி இளைஞர் ஜஸ்டின்


தூத்துக்குடி 2023 செப் 08 ;சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் கழகத்தினரின் வரவேற்பு பெற்றுக்கொண்டு வெளியே வரும் போது வாசலில் மாற்றுத்திறனாளி ஜஸ்டின் தனது மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் நின்றிருந்தார் அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் என்னப்பா ஜஸ்டின் எப்படி இருக்க? என்று கேள்வி கேட்டவுடன் ஜஸ்டினுக்கு ஆனந்தம் பொங்கியது. உடனே ஏற்கனவே செக் எழுதி வைத்திருந்ததை உதயநிதி ஸ்டாலின்  கையில் ரூ 50.000 -திற்கான காசோலையை வழங்கி இருக்கிறார். அப்பொழுது தொழில் நல்லா பாத்துக்கோ என்று கூறிவிட்டு உதயநிதி அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தார். அதற்கு பிறகு சென்னைக்கு சென்ற பின்பு செப்டம்பர் 7ஆம் தேதி அவர் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார் அதில் கூறியதாவது           
      தூத்துக்குடியில் உதயநிதி ஜுஸ் பார் கடை நடத்திவரும் உரிமையாளர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்னைக் காண்பதற்கு இருசக்கர வாகனத்தில் பயணமாகி சென்னைக்கு வந்து, உதவி கேட்டிருந்தார். அந்த உதவியின் பெயரில் அவருக்கு ஜூஸ் பார்க் கடை வைக்கப்பட்டது.                                                                                                                      அதன் பின்னர் ஜஸ்டின் சேலத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு நிதியாக ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார் ஜஸ்டினை பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம் ஜஸ்டின் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய வாழ்க்கையை தானே மாற்றும் வல்லமை படைத்து ஒரு திறனாளி அவருக்கு தேவை ஓர் உந்துதல் அதற்காக என்னை காண இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்திருந்தால் அவருக்கு தூத்துக்குடி மாநகரில் பழச்சாறு வைக்கும் கடையை கழக இளைஞர் அணியின் சார்பில் ஜோயல் அமைத்துக்கொடுத்தார்.                 இன்று அவர் பிறருக்கு உதவி செய்யும் இடத்தில் இருந்து ரூ 50.000 ஆயிரம் சேலம் மாநாடு வளர்ச்சி நிதிக்கு தந்துள்ளார். அதனால் மகிழ்ந்தேன் என்று உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo