சொத்து தகராறில் ஏற்பட்ட முன் விரோதத்தில் 80வயது கொலை ;8 மணி நேரத்தில் கொலை வழக்கில் 2 பேரை கைது செய்த போலிஸாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ். பி.ஜெயக்குமார் பாராட்டு
கோவில்பட்டி 2020 டிசம்பர் 4 ;தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டியன் புளிக்குளத்தில் ஒருவர் கொலை - சம்மந்தப்பட்ட எதிரிகள் 8 மணி நேரத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டியன் புளிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் மந்திரம் (80) என்பவர் இன்று (04.12.2020) காலை அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த கடம்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, மணியாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் உதவி ஆய்வாளர் நவநீதன், காவலர்கள் இசக்கிமுத்து, விடுதலை பாரதி கண்ணன், வேல்முருகன் மற்றும் பொன்னுத்துரை அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி தனிப்படையினர் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த கோமதி என்ற மக்காளிப்பாண்டியன் மகன் ஆறுமுகப்பாண்டி (35) மற்றும் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மணிகண்டன் (29) ஆகிய இருவரையும் இன்று ஓணமாக்குளத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சொத்து தகராறில் ஏற்பட்ட முன் விரோத்த்தில் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்தில் மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.