Onetamil News Logo

தலைவரே உங்களை  இப்போதாவது ஒருமுறை அப்பா என்று அழைக்கட்டுமா? ;ஸ்டாலினின் உருக்கமான கடிதம் ;பரபரப்பு 

Onetamil News
 

தலைவரே உங்களை  இப்போதாவது ஒருமுறை அப்பா என்று அழைக்கட்டுமா? ;ஸ்டாலினின் உருக்கமான கடிதம் ;பரபரப்பு 


சென்னை 2018 ஆகஸ்ட் 7 ; ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம் சென்னை: எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன், ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.                                                                                
 திமுக தலைவர் கருணாநிதி குறித்து ஸ்டாலின் டிவிட் செய்து இருக்கிறார். அதில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அகில், எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும் என் ஆருயிர் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வை, உடலை, உயிரை இதயத்தில் இரண்டு கலந்துவிட்ட தலைவா, எங்களை எல்லாம் இங்கேயே ஏங்க விட்டு சென்றீர்கள். ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ இங்கே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 வருடத்திற்கு முன்பே எழுதினீர்கள். இதோ இந்த தமிழ் சமூகத்திற்காக இடையராது உழைத்து போதும் என்று சென்று விட்டீர்களா? என்று நீண்டு செல்லும் இந்த உருக்கான் கடிதத்தில், எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன், ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே சோகமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த கடிதம் திமுக தொண்டர்களை கலங்கடித்துள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo