Onetamil News Logo

கள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற  அத்தையின் கணவர் கைது

Onetamil News
 

கள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற  அத்தையின் கணவர் கைது


சென்னராயப்பட்டணா 2019 ஆகஸ்ட் 4 ;கள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற கள்ளக்காதல் அத்தையின் கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னராயப்பட்டணா தாலுகாவில், இளம்பெண் கொலை வழக்கில் போலீசாருக்கு துப்பு துலங்கியது. கள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற கள்ளக்காதலனான அத்தையின் கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஒரு தோப்பில் கடந்த மாதம்(ஜூலை) 23-ந் தேதி இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த இரேசாவே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் படுகொலை செய்யப்பட்டு இருந்த அந்த பெண்ணின் புகைப்படங்களையும் போலீசார் ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, அவர் யார்? என்று விசாரித்து வந்தனர்.
அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் அந்த புகைப்படத்தில் இருப்பது தனது மகள்தான் என்று இரேசாவே போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் ஹாசனுக்கு வரவழைத்து, படுகொலை செய்யப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலை காண்பித்தனர். அப்போது அவர் அது தன்னுடைய மகள்தான் என்று உறுதிப்படுத்தினார்.
அதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்டது பெங்களூருவைச் சேர்ந்த சித்ரா(வயது 23) என்பதும், அவர் பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் சித்ராவின் செல்போன் எண்ணை கைப்பற்றி அவர் யார், யாருடன் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விவரங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது அத்தையின் கணவர்(அதாவது தனது அப்பாவின் தங்கையின் கணவர்) சீனிவாசுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் காணாமல் போன அன்றும் சீனிவாசுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்தது கண்டறியப்பட்டது.
துப்பு துலங்கியதை அடுத்து சீனிவாசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-
முதலில் தனக்கும், சித்ராவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறிய சீனிவாஸ், பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சித்ராவை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதாவது சீனிவாசின் மனைவியின் சகோதரனின் மகள் தான் சித்ரா. தனது பெற்றோருடன் பெங்களூருவில் வசித்து வந்த சித்ரா, விடுமுறை நாட்களில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்று வந்தார்.
அப்போது சித்ராவுக்கும், சீனிவாசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போன்களில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் உல்லாசம் அனுபவித்தும் வந்தனர். இதனால் சித்ரா கர்ப்பம் அடைந்தார்.
கர்ப்பிணியான தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சீனிவாசை சித்ரா வலியுறுத்தி வந்தார். ஆனால் கர்ப்பத்தை கலைத்துவிடும்படி சீனிவாஸ், சித்ராவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சித்ரா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாஸ் சித்ராவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் சம்பவத்தன்று சித்ராவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னப்பட்டணாவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அதன்பேரில் சித்ராவும் தனது வீட்டுக்கு தெரியாமல் சென்னராயப் பட்டணாவுக்கு சென்று, சீனிவாசை சந்தித்துள்ளார். பின்னர் அவர், சித்ராவை சென்னப்பட்டணா அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
பின்னர் சித்ராவுக்கும், சீனிவாசுக்கும் இடையே திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கர்ப்பத்தை கலைத்துவிடும்படி சித்ராவிடம், சீனிவாஸ் எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு சித்ரா மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாஸ், சித்ராவை அடித்து, உதைத்தார்.
பின்னர் அவர், சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தோப்பில் உள்ள புதரில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்ராவின் கள்ளக்காதலனான சீனிவாசை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo