Onetamil News Logo

தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 'வானவில் மன்றம்' என்ற அமைப்பை  கனிமொழி கருணாநிதி எம்பி துவக்கி வைத்தார்.   

Onetamil News
 

தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 'வானவில் மன்றம்' என்ற அமைப்பை  கனிமொழி கருணாநிதி எம்பி துவக்கி வைத்தார்.     


 அரசுப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இன்று திங்கள்கிழமை, தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 'வானவில் மன்றம்' என்ற அமைப்பை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் துவக்கி வைத்து, விழாவில் சிறப்புரையாற்றினார். முன்னதாக அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தயார் செய்திருந்த அறிவியல்  மற்றும் கணித படைப்புகளை பார்வையிட்டார்!
           உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo