Onetamil News Logo

பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டுகிறார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

Onetamil News
 

பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டுகிறார் கனிமொழி கருணாநிதி எம்.பி.


ஒடிசா 2021 அக்டோபர் 13 ;மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு திமுக ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி,முதல் கட்ட நடவடிக்கையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! 
அதோடு நின்று விடாமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகின்றார்.
 அந்த வகையில் இன்று (13/10/2021) புதன்கிழமை, திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், திமுகவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி, ஒடிசா மாநிலத்தின்  முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை நேரில் சந்தித்து மொழி பெயர்க்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும்  மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo