கனிமொழி கருணாநிதி எம்பி காயல்பட்டினம் பகுதியில் இரத்த சுத்திகரிப்பு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
திருச்செந்தூர் 2021 பிப்ரவரி 26 ;தூத்துக்குடி தெற்கு மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி தனது பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
உடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முகம்மது அப்துல் காதர், நகரப் பொறுப்பாளர் முத்து முகம்மது, மதிமுக மாவட்ட பொருளாளர் அமானுல்லா, கோமான் மொட்டையார் பள்ளி தலைவர் கோஸ் முகம்மது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை துணைத் தலைவர் முகைதீன் தம்பி, அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் முத்து கிருஷ்ணன் (எ) கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்!