தனசேகரன் நகரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் கரிசல் இலக்கிய பூங்கா திறப்பு விழா,கனிமொழி கருணாநிதி எம்.பி.பங்கேற்று திறந்துவைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி தனசேகரன் நகர் பூங்கா கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரதிட்டத்தின் கீழ் தனசேகரன் நகரில் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் கரிசல் இலக்கிய பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டி சிறுவர்கள் விளையாட்டு போட்டி மற்றும் சைக்கிள் மெது ஓட்டம்;, ஆகியவற்றை தொடங்கி வைத்து பூங்காவை முழுமையாக பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, இந்திராநகர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், கவுன்சிலர்கள் வைதேகி, அந்தோணிபிரகாஷ், சரவணக்குமார், பொன்னப்பன், சுப்புலட்சுமி, தெய்வேந்திரன், காந்திமதி, மகளிர் அணி அமைப்பாளர்கள் கஸ்தூரி, சுகாதரா ஆய்வாளர் ஹரிகணேஷ், உதவி ஆணையர் தனசிங், நிர்வாகிகள் ராஜாமணி, ரேவதி, சத்யா, பார்வதி, பிரபாகர், ரமேஷ், லிங்கராஜா, முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட அவைதலைவர் அருணாச்சலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.