Onetamil News Logo

கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவி கொலை செய்த வழக்கில் அவரது தந்தை கைது 

Onetamil News
 

கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவி கொலை செய்த வழக்கில் அவரது தந்தை கைது 


 புதுக்கோட்டை 2020 ஜூன் 2 ;புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவி கொலை செய்த வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர்  மகள் மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர் கடந்த திங்கள் கிழமை காலையில் அருகில் உள்ள குளத்திற்கு தண்ணிர் எடுக்கச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார். சிறுமியின் சாவுக்கு காரணமாகவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சிபிஎம், மாதர் சங்தக்தினர் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினர். தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைத்து  அடக்கம் செய்தனர். ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்து இன்று  குற்றவாளியை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஆலோசனையின் பெயரில் போலீசார் புலன் விசாரணை செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo