Onetamil News Logo

விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை

Onetamil News
 

விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை


கன்னியாகுமரி 2020 மே 22 ;விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
கொரோனா ஊரடங்கினால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சரியான விலைக்கு விற்கமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைத்துறை அரசின் வழிகாட்டுதலின் பேரில் பல வழிமுறைகளை வகுத்து விவசாயப்பணிகள் தொய்வில்லாமல் நடைபெற பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளது.
இக்காலத்தில் அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்க்காக வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை  இணைந்து தொலைபேசி வழி கலந்துரையாடல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தின்  திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருக்குமரன் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர் கூறும் போது தற்போதைய சூழ் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள  அரசு கூறியுள்ள ஆலோசனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கையுறை அணிதல் மற்றும் வேளாண்கருவிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை அறிவுறித்தினார். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வேளாண் வணிகத்துறை மூலம் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்வதில் எதாவது இடர்பாடுகள் இருந்தால் பொறுப்பாளர்களை அணுகுமாறு ஆலோசனை வழங்கினார். மேலும் வாழை, நெல், தென்னை மற்றும் காய்கறிகள் சாகுபடியில் உள்ள தொழிநுட்பங்கள், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, உர மேலாண்மை, இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, அம்பாசமுத்திரம் பகுதிகளை சார்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் அலுவலர் ரெத்தினராஜா, மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்துருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo