சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் பெயரை மாற்றாமல் அப்படியே தொடர கோரிக்கை
நாகர்கோவில் 2019 பிப்ரவரி 6 ;சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் பெயரை மாற்றாமல் அப்படியே தொடர கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த ஜி.ஜெயகர்ணன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்து அரசியல்வாதிகளின் பெயரை வைக்க அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்ற வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களின் பெயரை மாற்றாமல் அப்படியே தொடர வேண்டும் என்றும்
தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்ற வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.