Onetamil News Logo

ஞாயிற்றுகிழமை சென்னை செல்லும் சிறப்பு ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை

Onetamil News
 

ஞாயிற்றுகிழமை சென்னை செல்லும் சிறப்பு ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை   


 கன்னியாகுமரி ,2019 பிப்ரவரி 14 ;ஞாயிற்றுகிழமை சென்னை செல்லும் சிறப்பு ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க கோரிக்கை P.Edward Jeni கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜெனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....
        ஞாயிற்றுகிழமை நாகர்கோவிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளுத இத குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
        தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் கல்லூரிபடிப்பை முடித்துவிட்டு பணிகள் நிமித்தம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே துறையில் தென்மாவட்டங்களுக்கு புறக்கணிப்பு என்பது இருவழிப்பாதை, மின்மயமாக்கல், புதிய ரயில்கள், புதிய ரயில்வே திட்டங்கள், ரயில்வே தொழிற்சாலைகள், ரயில்நிலையங்களை விரிவாக்கம் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களில் புறக்கணிப்பு நாடு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புறக்கணிப்பதை எடுத்துறைத்து அரசுக்கு சொல்லவேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் மௌனமாக இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.
       ரயில்வேதுறை கூட்டநெரிசல் உள்ள நேரங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்குவது ஆண்டு தோறும் நடந்து கொண்டே வருகிறது. பொதுவாக இவ்வாறு ரயில்வேதுறை அறிவிக்கும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ரயில்வேயில் உள்ள தொலைதூர இடங்களுக்கு இயங்கும் ரயில்களின் பெட்டிகள் ஒரு சில நாட்கள் காலியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காலி ரயில்பெட்டிகளை கொண்டுதான் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இவ்வாறு தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்குதான் அதிக அளவு இயக்கப்படும். பொதுவாக ரயில்வேதுறை ஓர் புதிய வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றால் அந்த வழித்தடத்தில் முதலில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கும். இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பயணிகளால் வரவேற்பை பெற்றுள்ளதா என்றும், ரயில்வேதுறைக்கு அந்த வழித்தடத்தில் இயக்கியதால் எவ்வளவு இலாபம் கிடைத்து என்று தகவல்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்படும். இவ்வாறு வருடாவருடம் இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கணக்கில் கொண்டு பட்ஜெட்டில் அல்லது ரயில்காலஅட்டவணையில் அந்த ரயில்களில் ஒரு சில ரயில்களை நிரந்தர ரயிலாக இயக்கப்படும். ஆனால் தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்படுவது இல்லை. இது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்திலிருந்து பல்வேறு ரயில்கள் முதலில் சிறப்பு ரயில்களாக இயக்கி அதன் பிறகு அந்த வருட பட்ஜெட்டில் நிரந்திர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. எ.கா கொச்சுவேலி -ஹ{ப்ளி, கொச்சுவேலி –பாவாநகர், கொல்லம் -ஐதராபாத், எர்ணாகுளம் - பெங்களுர், புதுடில்லி - திருவனந்தபுரம் போன்ற ரயில்களை கூறலாம். ஆனால் தமிழகத்துக்கு என்றால் ரயில்வேதுறை வேறு கொள்கைகளை பின்பற்றி வருவது வியப்பாகவே இருக்கிறது. தென்தமிழகத்தில் சிறப்ப ரயில்களாக இயக்கப்படும் கீழேக் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாகர்கோவில் - சென்னை ஞாயிறு சிறப்பு ரயில்:-
          நாகர்கோவிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுகிழமைகளில் மாலை 5:00 மணிக்கு புறப்படுமாறு ஓர் சிறப்பு ரயில் கடந்த பத்து ஆண்டுகளாகவே இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத பெப்ரவரி மாதம் கூட இந்த ரயில் காத்திருப்போர் பட்டியலுடனே இயங்குகிறது. இந்த ரயில் நாகர்கோவில் பனிமனையில் உள்ள நாகர்கோவில் - காந்திதாம் ரயில் மூன்றுநாள் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில்பெட்டிகளை வைத்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுகிழமை நாகர்கோவிலிருந்து புறப்படுவதால் வாரவிடுமுறை முடித்து சென்னைக்கு செல்லும் பயணிகளால் நிரம்பி காத்திருக்கும் பட்டியலுடனே இயங்கி ரயில்வே துறைக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. இந்த ரயிலை இயக்க தேவையான பெட்டிகள், காலஅட்டவணையின் கூடிய வழித்தடம், பராமரிப்பு பணிகள் போன்ற அனைத்தும் இருந்தும் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகம் இதுவரை முன்வரவில்லை. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தில் இது போன்று இரண்டுநாள் காலியாக நிற்கும் ரயில் பெட்டிகளை வைத்து திருவனந்தபுரம் - சென்னை, எர்ணாகுளம் - பெங்களுர் வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  குமரி மாவட்டத்திலிருந்து நமது மாநில தலைநகரான சென்னைக்கு 2006-ம் ஆண்டிற்கு பிறகு எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. ரயில் ஆகவே இந்த வாராந்திர ரயிலை நிரந்திர ரயிலாக இயக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கை  ஆகும்.
கொச்சுவேலி – சென்னை குளிர்சாதன ரயில்:
        தமிழகத்தில் உள்ள தென்மாவட்ட பயணிகள் தற்போது குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த 2013-ம் வருடம் கோடைகாலத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, வழியாக சென்னைக்கு முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தென் மாவட்ட பயணிகளால் நல்ல வரவேற்பை பெற்று ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைத்தது குறிப்பிடதக்கது. இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo