Onetamil News Logo

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது.   

Onetamil News
 

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது.   


                                                                                                        
கன்னியாகுமரி 2018 நவம்பர் 10 ;கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மிகமிக முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பார் பாஸ்டு ரயில்  என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் எட்வர்ட் ஜெனி  தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது...
      கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மிகமிக முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பாபாஸ்டு ரயில் ஆகும். இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 1000 நபர்கள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வரும் வருவாயில் ஐம்பது சதமானம் இந்த ரயில் மூலமாக கிடைத்து வருகிறது.  முதலில் இந்த ரயில் துவங்கப்பட்ட காலம் முதல் தனிதனி ரயில் பெட்டிகளாகவே இயக்கப்பட்டு வந்தது. பின்னர் 2014-ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி – பெங்களுர் ரயிலின் பெட்டிகளுடன் இணைந்து சயமந ளாயசiபெ யசசயபெநஅநவெ  என்று சொல்லப்படும் திட்டத்தின் படி இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்பட்டு வந்த போது கடந்த நான்கு ஆண்டுகளாகவே வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காலதாமதமாக சென்னைக்கு சென்றுவந்தது. இதன்காரணமாக இந்த கன்னியாகுமரி – பெங்களுர் ரயிலின் இணைப்பு ரயில் திட்டத்தை ரத்து செய்து தனிதனி ரயில்பெட்டிகளாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தனி ரயில்பெட்டிகளாக இயக்கப்பட்டு வருகிறது. 
 தற்போது இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் காலை முதல் மாலை வரை காலியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பெட்டிகளை கொண்டு 56318 நாகர்கோவில் - கொச்சுவேலி பயணிகள் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதன்படி காலை கன்னியாகுமரிக்கு வந்து சேரும் ரயில் பெட்டிகள் காலியாக நாகர்கோவில் வந்துவிட்டு 7:55 மணிக்கு 56317 நாகர்கோவில் - கொச்சுவேலி பயணிகள் ரயிலாக செல்லும். பின்னர் இந்த ரயில் பெட்டிகள் கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் பயணிகள் ரயிலாக வந்து விட்டு நாகர்கோவிலிருந்து காலிரயில்பெட்டியாக கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து கன்னியாகுமரி – சென்னை ரயிலாக சென்னைக்கு இயக்கப்பட இருக்கிறது. இவ்வாறு இந்த ரயில் பெட்டிகளை கொண்டு பயணிகள் ரயில் இயக்குவதால்; அந்த பயணிகள் ரயில் காலதாமதமாக வந்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக சென்னைக்கு இயக்கப்படும். இதனால் குமரி மாவட்ட பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொண்டு ரயில்கள் இயக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் ரயில்வேத்துறையை கேட்டு கொள்கிறது.

இடநெருக்கடியை போக்க நடவடிக்கை:
    நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை போக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி குமரி மாவட்ட பயணிகள் பாதிக்கும் வகையில் திருவனந்தபுரம் கோட்டம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பத்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்து சேரும் சூப்பர்பாஸ்டு ரயிலின் ரயில் பெட்டிகளை கொண்டு 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்குவதால் கோவை ரயில் காலதாமதமாக நாகர்கோவில் வந்தால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயிலும் காலதாமதமாக செல்லும். இதனால் தினசரி திருவனந்தபுரத்துக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.  இது மட்டுமில்லாமல் திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் காலதாமதமாக இயங்கும் போது கோவை செல்லும் ரயிலும் காலதாமதமாக இயக்கப்படும். கடந்த வாரம் இந்த கோவை ரயில் இரண்டு மணிநேரம் காலதாமதமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடதக்கது.
 திருவனந்தபுரத்தில் நிலவும் இடநெருக்கடியை போக்க வேண்டி அங்கு பராமரிக்கப்பட்டு வந்த ரயில்களில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயில் நாகர்கோவிலுக்கு பராமரிக்கு வர இருக்கிறது. இதன்படி அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேரும் இந்த அமிர்தா ரயிலின் காலி பெட்டிகள் திருவனந்தபுரம் -நாகர்கோவில் 56311 ஆக நாகர்கோவில் வந்து விட்டு இங்கு பராமரிப்பு பணிகள் செய்துவிட்டு மாலை இங்கிருந்து நாகர்கோவில் - திருவனந்தபுரம் 56316 ரயிலாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மதுரை அமிர்தா ரயிலாக புறப்பட்டு செல்ல இருக்கிறது.          
கடந்த 15 ஆண்டுகளாகவே திருவனந்தபுரம் - மங்களுர் ரயிலை நாகர்கோவிலுக்கு நீட்டிப்பு செய்து  இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமிர்தா ரயிலை பராமரிப்புக்கு என நாகர்கோவில் வரும் போது இந்த மங்களுர் ரயிலை நீட்டிப்பு செய்ய முடியாத நிலை வந்துள்ளது. திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இது போன்ற ரயில்களை நீட்டிப்பு செய்யவே மாட்டார்கள். நடு இரவு புறப்படும் ரயில்கள், கேரளா, கோவை வழியாக சுற்றி செல்லும் ரயில்கள் போன்றவற்றை மட்டும் இங்கிருந்து இயக்குகின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையம் கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆகவே உள்ளது.  கேரளா ரயில்களை இங்கு வைத்து பராமரிப்பு பணிகள் செய்து, சுத்தம் செய்து, தணிணீர் பிடித்து கேரளாவுக்கு நாம் அனுப்ப வேண்டும். இதுதான் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo