Onetamil News Logo

whats app மூலமாக போலி பவர் பேங்க் குறித்து கருத்து பரப்பியதை தொடர்ந்து போலிஸ் நடவடிக்கை ;இரண்டு பேர் கைது 

Onetamil News
 

whats app மூலமாக போலி பவர் பேங்க் குறித்து கருத்து பரப்பியதை தொடர்ந்து போலிஸ் நடவடிக்கை ;இரண்டு பேர் கைது 


கன்னியாகுமரி 2018 டிசம்பர் 7 ;கன்னியாகுமரி சுற்றுலா தளங்களில் செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தும்  போலி பவர் பேங்க்  விற்பனை செய்த இரண்டு பேரை கன்னியாகுமரி போலிஸார் கைது செய்தனர். நூற்றுக்கணக்கில் செல்போன்  போலி பவர்  பேங்க் மற்றும் 15 ஆயிரம் ரூபாய்  பறிமுதல். குமரியில் ஏமாற்றப்பட்ட ஐய்யப்ப பக்தர்  whats app மூலமாக போலி பவர் பேங்க் குறித்து கருத்து பரப்பியதை தொடர்ந்து போலிஸ் நடவடிக்கை.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் கன்னியாகுமரி மிக முக்கியமானது.  இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை மார்கழி தை மாதங்களில் ஐய்யப்ப பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும்.  இந்த சீசனில்  பிற மாநிலத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள்  குமரியில் ஆயிரகனக்கான தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்வார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குமரிக்கு வந்த ஐய்யப்ப பக்தர் ஒருவர் தற்காலிக கடை ஒன்றில் செல்போன் சார்ஜ் போட பயன்படும் பவர் பேங்க் ஒன்றை வாங்கி சென்றுள்ளார். பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக வாகனத்தில் செல்லும் பொழுது தான் வாங்கிய பவர் பேங்க் சாதனத்தை பிரித்து பார்த்த பொழுது அது போலி என தெரிவந்துள்ளது.இதனால்  தான்  ஏமாற்றப்பட்டுள்ளோம் எனஅறிந்த அவர் இது குறித்து சமூக வலை தளங்களான Facebook whatsapp ல் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். இது அனைத்து இடங்களிலும் வைரலாக பரவி வந்த நிலையில்  இன்று இரவு குமரியில் போலி பவர் பேங்க் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த சித்திக் மற்றும் பெங்களூரை சேர்ந்த சபீர் உல்லா ஆகிய இருவரை குமரி போலிஸார் கைது செய்தார்கள். மேலும் இவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் பவர் பேங்க்  மெம்மரி கார்டு சாதனங்களையும் ரொக்க ருபாய் 15 ஆயிரமும்  பறிமுதல் செய்யப்பட்டது. Facebook மூலமாக பரவிய  செய்தி அடிப்படையில்  போலிஸார் இருவரை கைது செய்தது குமரி சுற்றுலா வியாபாரிகளிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo