Onetamil News Logo

கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருப்பதி வழியாக ஐதராபாத்க்கு தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்கம் பத்து ஆண்டுகளாக கிடப்பில்?

Onetamil News
 

கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருப்பதி வழியாக ஐதராபாத்க்கு தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்கம் பத்து ஆண்டுகளாக கிடப்பில்?


தூத்துக்குடி 2019 மே 19 ;  தமிழ்நாட்டின் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து தெலுங்கானாவின் தலைநகரான  ஐதராபாத்துக்கு செல்ல நேரடி தினசரி இரயில் வசதி இல்லை திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரகணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பபு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தம் தினசரி சென்று வருகின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரிக்கு போன்ற சுற்றுலா இடங்களுக்கு வரும் பயணிகளுக்கு நேரடியாக வருவதற்கு எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லை. தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமனால்  காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் இரயிலில் செல்ல வேண்டும்.  இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. இதனால் தென் மாவட்ட  பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களுர், மங்களுர், கோவை போன்ற நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஐதராபாத்துக்கு மட்டும் வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. தற்போது நாகர்கோவிலிருந்து காச்சிகுடாவுக்கு வாராந்திர இரயில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் மதுரையிலிருந்து காச்சிகுடாவுக்கும் வாராந்திர ரயிலும், ராமேஸ்வரத்திலிருந்து ஓக்காவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் காச்சிகுடா வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மூன்று தினசரி ரயில்களும், திருப்பதியிலிருந்து ஐதராபாத்துக்கு கணிசமான அளவு ரயில்கள் இயக்கப்படுகிறது. 
         கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு செகந்திராபாத்தை தலைமையிடமாக கொணட் தென் மத்திய ரயில்வே கன்னியாகுமரியிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க 2009-ம் ஆண்டே முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கு கன்னியாகுமரியில் முனையவசதிகள் குறைவாக இருக்கின்ற காரணத்தை கூறி திருவனந்தபுரம் கோட்டம் இந்த திட்டத்துக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டதாக ஆண்டு தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் 2008-ம் ஆண்டு காச்சுகுடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க 2008-ம் ஆண்டு நடைபெற்ற ரயில் காலஅட்டவணை மாநாட்டில் வைத்து திட்டகருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கும் தெற்கு ரயில்வே இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை. காரணம் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை ஒரு வழிபாதையாக இருக்கின்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. அடுத்த 2010-ம் ஆண்டு அப்போதைய ஆந்திரா முதல்வர் ரோசையா அவர்கள் ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து தங்கள் மாநில கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது சென்னை – காச்சுகுடா ரயிலை திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
   இந்த 2018-ம் வருடம் ரயில்கால அட்டவணை தயாரிக்கும் முன்பு நடைபெற்ற ரயில்காலஅட்டவணை மாநாட்டில் மதுரை – காச்சுடா வாராந்திர ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று ஓர் திட்ட கருத்துரு தென்மத்திய ரயில்வே மண்டலத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டமும் ஏதோ காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது. இதைப்போல் கடந்த 2017 ஆண்டு ரயில்காலஅட்டவணை மாநாட்டிலும் செகந்திராபாதிலிருந்து மதுரை, திருச்சி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு ரயில் இயக்க திட்டம் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டமும் அமுல்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது. இதைப்போல் 2008-ம் ஆண்டும் காச்சுகடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு தினசரி ரயிலும் ராமேஸ்வரத்திலிருந்து செகந்திராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்றும் திட்டகருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் இயக்கப்படவில்லை.
திருவனந்தபுரம் கோட்டம்:-
       ரயில்காலஅட்டவணை மாநாட்டில் ஓரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு புதிய ரயில் இயக்க திட்ட கருத்துரு சமர்ப்பிக்கும் போது மறுமுனையில் உள்ள மண்டலம் மற்றும் கோட்ட அதிகாரிகள் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் மதுரை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்க எந்த ஒரு கருத்துருக்கும் ஒப்புதல் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் கேரளா பயணிகள் பயன்படும் படியாகவும்  கன்னியாகுமாயிலிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோவை வழியாக எந்த ஒரு திட்டம் வந்தால் உடனடியாக ஒப்புதல் அளித்துவிடுவார்கள். ஏனென்றால் இது போன்ற ரயில்கள் சுற்றுபாதையில் இயக்குவதால் குமரி மாவட்ட பயணிகள் பயணம் செய்யமாட்டார்கள். இவ்வாறு பயணம் செய்யாமல் இருந்தால் அது கேரளா பயணிகளுக்கு முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இவ்வாறு ரயில்கள் இயக்கினால் குமரிக்கு புதிய ரயில்கள் இயக்கிவிட்டதாகவும் ஒரு தோற்றத்iயும் உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு 2011-ம் ஆண்டு இயக்கப்பட்ட  ரயில்தான் கன்னியாகமரி – திப்ருகர் ரயில் ஆகும். இந்த ரயில் இயக்க எந்த ஒரு முனைய பிரச்சனைகளும் அவர்களுக்கு வராது. ஆனால் கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் முனைய பிரச்சனை, நடைமேடை பிரச்சனை, ரயில் பெட்டிகள் பற்றாகுறை, இருப்புபாதை பிரச்சனை, ஊழியர்கன் பற்றாக்குறை என் அனைத்து பிரச்சனைகளும் வந்துவிடும்.
சென்னை – மதுரை இருவழிபாதை:-
          சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி வழியாக மதுரை வரை உள்ள பாதை இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பாதையில் புதிய ரயில்கள் அதிக அளவில் இயக்கலாம். இதைப்போல் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையும் இருவழிபாதையாக மாற்றும் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
        ஆகவே தென்மாவட்ட பயணிகளின் நலன்கருதி கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, வெல்லூர், காட்பாடி, திருப்பதி வழியாக தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்க்கு தினசரி புதிய சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும். இந்த வழி தடத்தில் ரயில் இயக்கினால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12 மாவட்ட பயணிகள் நேரடியாக பயன்படியாக இருக்கும். 
2009ம் ஆண்டு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்துக்கு தென்மத்திய ரயில்வேயிருந்து கன்னியாகுமரி – ஐதராபாத் தினசரி ரயில் இயக்க கடிதம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo