Onetamil News Logo

இந்த ஆண்டு 90 ரயில்களுக்கு புதிய நிறுத்தம் அனுமதி  ஆனால் இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிலையத்தில் நிறுத்தம் இதுவரை இல்லை

Onetamil News
 

இந்த ஆண்டு 90 ரயில்களுக்கு புதிய நிறுத்தம் அனுமதி  ஆனால் இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிலையத்தில் நிறுத்தம் இதுவரை இல்லை


கன்னியாகுமரி 2018 நவம்பர் 7;ரயில்வே வாரியம் இந்த 2018ம் வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகில இந்திய அளவில் 90 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் அதிக அளவு நிறுத்தங்கள் வடஇந்தியாவில் இயக்கப்படும் ரயில்கள் ஆகும். இந்த  நிறுத்தங்களில் குமரி மாவட்டத்துக்கு ஒரு நிறுத்தங்கள் கூட இல்லை. குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் பழைய ரயில்களுக்கு ஒரு நிறுத்தத்துக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. திருநெல்வேலியிருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜுலை 15-ம்தேதி முதல் இயக்கப்பட்டட வந்தது. இந்த ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும்படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக ஐந்து ஆண்டுகள் கழித்து 2017-ம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு ஜுலை 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் முதலில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்கப்படவில்லை. இரணியல் ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் நாகர்கோவில் ரயில் நிலையமும் மறுமார்க்கம் 15 கி.மீ தொலைவில் குழித்துறை ரயில் நிலையமும் அமைந்துள்ளது. 

நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி மார்க்கம் பகலில் பத்து மணிநேரம் இரயில் இல்லாத குறையை போக்க இந்த இரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்காதது எந்த நோக்கத்துக்காக ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் மூன்று பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரயில்வேத்துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.

      ரயில்வேத்துறை ஓர் புதிய ரயில் அறிவிக்கும் போது அல்லது நீட்டிப்பு செய்து இயஙக்கும் போது முதலில் கொடுக்கப்படும் ரயில் நிறுத்தங்கள் நிரந்தர நிறுத்தமாக அறிவிக்கப்படும். அதன் பிறகு புதிய நிறுத்தங்கள் எளிதாக கொடுக்கப்பட மாட்டாது. இவ்வாறு கொடுத்தால் அந்த நிறுத்தங்கள் எல்லாம் தற்காலிக நிறுத்தமாகவே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு குமரி மாவட்டத்தில் இரணியல் ரயில் நிலையத்தில் மும்பை – கன்னியாகுமரி, கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயில்கள், குழித்துறை ரயில் நிலையத்தில் நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில், கன்னியாகுமரி – ஸ்ரீவைஷ்ணதேவிகத்ரா ஆகிய ரயில்கள் இன்றுவரை தற்காலிக நிறுத்தமாகவே நின்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் இரணியல் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் நிற்காமல் செல்வதற்கு தகவல் அறியும் சட்டம் வாயிலாக ரயில்வேத்துறைக்கு கோரிக்கைக்கு பதில் கிடைத்தது. இதன்படி
     2010-ம் ஆண்டு கணக்கின்படி இரணியல் ரயில் நிலையத்தில் நான்கு விரைவு ரயில்களும் பத்து பயணிகள் ரயில்களும் நின்று செல்கின்றது. சராசரியாக 500 கி.மீக்கு மேல் விற்பனையாகும் பயணசீட்டு தினசரி 2 மட்டுமே என்றும் ரயில்வே வாரியத்தின் விதிகளின்படி 500 கி.மீக்கு மேல் தினசரி 40 பயணசீட்டுகள்  விற்பனை ஆனால் மட்டுமே புதிய ரயில் நிறுத்தம் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
       கடந்த ஜுலை மாதம் திருநெல்வேலியிருந்து  காந்திதாமுக்கு புதிதாக இயக்கப்பட்ட வாராந்திர ரயில் நாகர்கோவிலில் நிறுத்தம் இல்லை என்ற உடன் மத்திய இணை அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி ரயில்வே இணை அமைச்சரை நேரடியாக சென்று இந்த ரயிலுக்கு இந்த ரயில் இயங்கும் முதல்நாள் அன்றே நிரந்தர நிறுத்தம்வாங்கிவிட்டார். ஆனால் இவ்வாறு வாங்கும் போது இன்டர்சிட்டி, நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயிலுக்கு இரணியல் நிறுத்தமோ, நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில் ஆகிய ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 18 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் சுமார் 12 லட்சமக்கள் இந்த இரண்டு தாலுகாகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரண்டு தாலுகாவில் கல்குளம் தாலுகாவை சார்ந்த மக்கள் இரணியல் ரயில் நிலையத்தையும், விளவன்கோடு தாலுகா மக்கள் குழித்துறை ரயில் நிலையத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தாலுகாவை சார்ந்த பயணிகள் ரயில் பயணம் செய்ய வேண்டும் என்றால் நாகர்கோவில் அல்லது திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஏனென்றால் அனைத்து ரயில்களும் இந்த இரண்டு ரயில் நிலையத்துடன் நின்று விடுகிறது. இன்டர்சிட்டி ரயில் போல ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டாலும் இந்த ரயில்களுக்கு இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது. மத்திய இணை அமைச்சர் உடனடியாக அவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள படி குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரணியல் ரயில் நிலையம்
1.    திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்
2.    நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில்
குழித்துறை ரயில் நிலையம்
1.    நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில்
2.    திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில்
நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்
1.    கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்
2.    நாகர்கோவில் - மங்களுர் பரசுராம் ரயில்
3.    மதுரை – புனலூர் பயணிகள் ரயில்
ஆளுர், குழித்துறை மேற்கு, பள்ளியாடி ரயில் நிலையங்கள்
1.    கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்
நிரந்தர நிறுத்தம்:-
            தற்காலிக நிறுத்தமாக இயக்கப்படும் ரயில்கள் ஆறு மாதத்துக்கு ஓருமுறை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆறு மாதம் என்று நிறுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் குமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பல்வேறு வாராந்திர ரயில்கள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிற்காமல் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில  ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் தற்காலிக நிறுத்தங்களாகவே பல ஆண்டுகளாகவே நின்று வருகிறது. இந்த ரயில்கள் மூலமாக நல்ல வருவாய் கிடைத்து வந்தும் ரயில்வேத்துறை இந்த நிறுத்தங்களை நிரந்தர நிறுத்தங்களாக இதுவரை அறிவிக்கவில்லை.
திருவனந்தபுரம் கோட்டத்தின் மறைமுக சதி:
             திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கொச்சுவேலி – மங்களுர் ஏரநாடு ரயில் நாகர்கோவில் நீட்டிப்பு செய்யும் போதே கேரளாவில் உள்ள நெய்யாற்றங்;கரை ரயில் நிலையத்துக்கு கோட்ட அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் நிரந்தர நிறுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு முதலில் நிறுத்தம் இல்லாமல் பல்வேறு போராட்டத்துக்கு பிறகு தற்காலிக நிறுத்தம் குழித்துறை ரயில் நிலையத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. இரணியல் ரயில் நிலையத்துக்கு நிறுத்தம் இதுவரை இல்லை. நெய்யாற்றங்கரை ரயில் நிலையத்துக்கு கொடுக்கப்பட்டது போல் குழித்துறை மற்றும் இரணியல, வள்ளியூர், நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இந்த வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்படும் போது நிரந்தர நிறுத்தம் முதலிலே கொடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

          இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது, தென் மாவட்டங்களில் தற்போது தற்காலிக நிறுத்தமாக நின்று செல்லும் ரயில்களை அந்த ரயிலால் கிடைக்கும் வருவாய் அடிப்படையில் நிரந்தர நிறுத்தமாக அறிவிக்க வேண்டும். திருவனந்தபுரம்; கோட்டத்தில்; அதிக ரயில் நிலையங்களில் தற்காலிக நிறுத்தம் உள்ளது. தமிழகத்தில் உள்ள ரயில்களை  நிரந்தர ரயில் நிறுத்தமாக அறிவித்து இயக்க மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்; நடவடிக்கை எடுக்கை வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்ட ரயில்கள் விபரம்.
1.       Stoppage of 04774 Suratgarh-Shri Ganganagar at Prithvirajpur
2.       Stoppage of 18243/44 Bhagat Ki Kothi Bilaspur Express at Chau Mahala
3.       Stoppage of 08 pair of train at Allahabad Chheoki station for upcoming Kumha Mela 2019
4.       Operation of 15547/15548 Jaynagar-Lokmanya Tilak(T) Jan Sadharan Express at Antyodaya Express
5.       Stoppage of 11093/94 CSMT-Varanasi Mahanagari Express at Shridham
6.       Stoppage of 19607/08 Kolkata-Ajmer Express at Baran
7.       Stoppage of 12939/12940 Pune-Jsipur Express at Bhawani Mandi
8.       Stoppage of 19659/19660 Kolkata Shalimar-Udaipur City Express at Baran
9.       Stoppage of 12369/70 Haridwar-Howrah Kumbha Express at Ara
10.   Stoppage of 14709/10 BKN-Puri Express at Raigarh
11.   Stoppage of 19319/19320 Indore-Veraval Express at Junagadh
12.   Stoppage of 18407/08 Puri-Sainagar Shirdi weekly Exoress at Raj Nandgaon w.e.f. 15.09.2018
13.   Stoppage of 19325/26 Indore-Amritsar Express at Shajapur
14.   Stoppage of 53139/53140 Kolkata-Jasidih Passenger at Vidyasagar station
15.   Stoppage of 12301/12302 HWH-NDLS Rajdhani Express at Asansol
16.   Stoppage of 13423/13424 Bhagalpur-Ajmer Express at Damoh
17.   Stoppage of 11703/04 Rewa-Indore Express at Bandakpur
18.   Stoppage of 19665/66 Khajuraho-Udaipur Express at Nivari
19.   Stoppage of 15053/54 CPR-LKO Express at Suraimanpur
20.   Stoppage of 21125/26 Ratlam-Bhind Express at Pachor Road
21.   Stoppage of 11801/02 Jhansi-Etawah Express at Soni Station
22.   Stoppage of 15715/15716 Kishanganj-Ajmer Garib Nawaj Express at Khairthal
23.   Stoppage of 16355/16356 KCVL-MAJN Antyodaya Express at Tirur
24.   Stoppage of 11093/11094 CSMT-BSB Mahanagari Express at Nandaon
25.   Stoppage of 12101/12102 Likmanya Tilak (T)-Howrah Jnaneswari Express at Raj Nandgaon
26.   Stoppage of 12937/12938 Gandhidham-Ahmedabad Garbha Express at Shri Mahabirji
27.   Stoppage of 18215/18216 Durg-Jammu Tawi Exptess at Tilda
28.   Stoppage of 16587/16588 Bikaner-Yesvantpur Express at Nokha
29.   Stoppage of 19107/19108 Ahmedabad-Udhampur janambhoomi Express at Kalayat
30.   Stoppage of 15715/15716 Kishanganj-Ajmer Express at Dausa
31.   Stoppage of 19263/19264 Porbandar-Delhi Sarai Rohilla Express at Bandikui
32.   Stoppage of 12547/12548 Ahmedabad-Agra Fort Express at Sirohi Road
33.   Stoppage of 12273/12274 Howrah-New Delhi Duronto Express at Asansol
34.   Stoppage of 11463/11464 Jabalpur-Somnath Express at Karakbel
35.   Stoppage of 14309/14310 Ujjain-Dehradun Express at Sarangpur
36.   Stoppage of 19053/19054 Surat-Muzaffarpur Express at Biyavra Rajgarh
37.   Stoppage of 19307/19308 Indore-Chandigarh Express at Pachor Road
38.   Stoppage of 12939/12940 Jaipur-Pune Express at Suwasra
39.   Stoppage of 11447/11448 Jabalpur-Howrah Shaktipunj Express at Vijaysota
40.   Stoppage of 14311/14312 Bareilly-Bhuj Ala Hazrat Express at Sojat Road
41.   Stoppage of 19269/19270 Porbandar-Muzaffarpur Express at Beawar
42.   Stoppage of 12159/12160 Jabalpur-Amravati Express at Bankhedi
43.   Stoppage of 16311/16312 & 17623/17624 at Shri Karanpur on the extended portion
44.   Stoppage of 19609/19610 Udaipur-Haridwar Express at Bhupalsagar
45.   Temprary stoppage of 12259/12260 Sealdah- New Delhi Duronto Express at Gaya
46.   Stoppage of 12189/12190 Jabalpur- H.Nizamuddin Mahakaushal Express at Unchhera
47.   Stoppage of 22943/44944 Indore-Pune Express should be provided at Khachrod station
48.   Additional stoppage of 14719/14720 Bikaner-Bilaspur Antyodaya Express at Nohar and Tehsil Bhadra
49.   Stoppage of 16355/56 KCVL-MAJN Antyodaya Express at Kasaragod
50.   Stoppage of 12229/30 at Alamnagar 13019/20 Bagh Express at Gomtinagar station
51.   Stoppage of 16355/16356 Kochuveli-Mangalore Junction Antyodaya Express at Alappuzha
52.   Stoppage of Train No. 22903/22904  Bandra (T) – Bhuj Express at Halvad
53.   Stoppage of Train No. 12961/62 Mumbai Central-Indore-Amravai Express at Vapi
54.   Stoppage of Train No. 19061/62 BDTS-Ramnagar Express at Nagda
55.   Stoppage of Train No. 12445/46 Uttar Sampark Kranti At Manwal Station
56.   Stoppage of 12941/42 Bhavnagar-Asansol Parasnath Express at Shamgarh and 19667/68 Udaipur City-Mysuru Express at Mandsor w.e.f. 13.06.2018 & 14.06.2018
57.   Stoppage of 19609/19610 Udaipur-Haridwar Express at Delhi Cantt.
58.   Stoppage of 12721/12722 Hyderabad-Hazrat Nizamuddin Dakshin Express at Dabra w.e.f. 01.06.2018
59.   Stoppage of 19269/19270 Porbandar-Muzaffarpur Express (Bi-weekly) and 12211/12212 Muzaffarpur-Anand Vihar Garibrath Express at Chakia w.e.f. 02.06.2018 and 01.06.2018 & 15211/15212 Darbhanga-Amritsar Jannayak Express at Pipra w.e.f. 01.06.2018.
60.   Stoppage of 16733/16734 Okha-Rameshwaram Express at Nandurbar station w.e.f. 27.05.2018
61.   Stoppage of 14117/14118 Allahabad-Basti Manwar Sangam Express at Babhnan station w.e.f. 25.05.2018
62.   Stoppage of 16191/16192 Tirunelveli-Tambaram Antyodaya Express at Kumbakonam w.e.f. date of introduction
63.   Stoppage of 12141/12142 Lokmanya Tilak (T)-Patliputra Express at Zamania w.e.f. 01.06.2018
64.   Stoppage of 12531/12532 Gorakhpur-Lucknow Intercity express at Maghar station w.e.r. 04.05.2018
65.   Stoppage of 12953/12954 Hazrat Nizamuddin-Mumbai August Kranti Rajdhani Express at Dahod w.e.f. 06.05.2018
66.   Stoppage of Train No. 12905/12906 Porbandar-Howrah Express should be provided at Bhanvad
67.   Stopage of 12057/12058 New Delhi-Una Himachal Janshatabdi Express (Daily) should be prov ided at Morinda
68.   Stoppage of 15013/15014 Jaisalmer-Kathgodam/Ramnagar Ranikhet Express should be provided at Beawar
69.   Provision of Additional stoppage of 22441/22442 Kanpur-Allahabad-Chitrakutdham Karwi Express
70.   Provision of Additional stoppage of 22441/22442 Kanpur-Allahabad-Chitrakutdham Karwi Express
71.   Stoppage of 22167/22168 Singrauli-H.Nizamuddin Express and 22165/22166 Singrauli-Bhopal Express should be provided at Marwasgram
72.   Stoppage of 11125/11126 & 21125/21126 Indore-Gwalior/ Bhind Express should be provided at Kolaras
73.   Stoppage of 12405/12406 Bhusaval-Hazrat Nizamuddin Gondwana Express at Murtizapur w.e.f. 05.04.2018
74.   Stoppage of 11093/11094 Mumbai CSMT-Varanasi Mahanagri Express at Pachora and 12655/12656 Ahmedabad-Chennai Central Navjeevan Express at Dharangaon w.e.f. 31.03.2018
75.   Stoppage of 12105 Gondia-Mumbai CSMT Vidarbha Express and 12111/12112 Mumbai CSMT-Amravati Express at Thane w.e.f. 02.04.2018
76.   Stoppage of 22151/22152 Pune Kazipet express at Hinganghat w.e.f. 31.03.2018
77.   Stoppage of 12465/12466 Indore-Jodhpur Ranthambhor Express at Mahidpur w.e.f. 22.03.2018
78.   Stoppage of 19323/19324 Indore-Bhopal Intercity Express at Kalapipal w.e.f. 22.03.2018
79.   Stoppage of 15125/15126 Manduadih-Patna Express at Dildarnagar station
80.  STOPPAGE OF 22823/22824 BUBANESWAR-NEW DELHI RAJDHANI EXPRESS AT MURI.
81.  Stoppage of train 12159/12160 Amravati-Jabalpur Express and 12119/12120 Amravati-Ajni Express at Chandur Station.
82.  Stoppage of 12243/12244 Chennai-Coimbatore Shatabadi Express at Katapadi and 22617/22618 Tirupati-Bangaluru Express at Jolarpettai.
83.  Stoppage of Train No.12449/12450 Madgaon-Chandigarh, Goa Sampark Kranti at Surat.
84.  Stoppage of 12471/12472 Bandra-SVDK, 12473/12474 ADI-SVDK, 12475/12476 Hapa- SVDK, 12477/12478 Jamnagar-SVDK  at Vikramgarh Alot station
85.  Stoppage of 20817/20818 New Delhi Bhubaneshwar Rajdhani Express at Angul.
86.  Stoppage of 12957/12958 New Delhi-Ahmedabad Rajdhani Express at Falna.
87.  Stoppage of 12971/12972 Bhavnagar - Bandra (T) Express at Joravarnagar.
88.  Stoppage of 16583/16584 Yeswantpur-Latur Tri-Weekly Express (New No.of 16571/16572 Yeswantpur-Bidar Express) at Bhalki and Udgir stations
89.  Stoppage of 19323/24 Indore-Habibganj Intercity Express at Berchha
90.  Stoppage of train No.12685/12686 Chennai-Mangaluru  Express (Daily) at Nileshwar Station.
 இந்த விபரங்கள் ரயில்வே வாரியத்தின் இந்த இணையதளத்தில் உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo