Onetamil News Logo

ஓவ்வொரு ஆண்டும் ரயில்வேத்துறை புதிய ரயில்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

Onetamil News
 

ஓவ்வொரு ஆண்டும் ரயில்வேத்துறை புதிய ரயில்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது.



நாகர்கோவில் 2019 ஏப்ரல் 24 ;ஓவ்வொரு ஆண்டும் ரயில்வேத்துறை புதிய ரயில்கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் புதிய காலஅட்டவணையை ரயில்வேத்துறை முழுவீச்சில் தயாரித்து வருகிறது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் வந்து புதிய அரசு ஆட்சி அமைத்தது பின்னர் பாராளுமன்றத்தில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் புதிய ரயில்காலஅட்டவணை வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ரயில்கால அட்டவணை வெளியிடப்பட்ட தேதி விபரங்கள் ஆண்டு வாரியாக
2014 – 01 செப்டம்பர் 
2009 - 01 நவம்பர்
2004 – 01 செப்டம்பர்
கன்னியாகுமரி மாவட்டம் 19 லட்சங்கள் மக்கள் தொகை கொண்டு தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து, சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்டத்தின் உள்ள மக்களின் மாநில தலைமை செயலகம், சட்டமன்ற வளாகம், அண்ணா பல்கலைகழகம், மருத்துவ பல்கலைகழகம் பல்வேறு மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களும் மாநிலத்தின் வடகோடியில் அமைந்துள்ள சென்னையில் அமைந்துள்ளது. தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் தெற்கே அதிக தொலைவில் கன்னியாகுமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் தலைநகருக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் செல்ல வேண்டும் என்றால் அதிக தூரம் மற்றும் அதிக பயண நேரம் என சுமார் 13 மணிநேரத்துக்கு மேல் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த காரணத்தால் குமரி மாவட்ட மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். 
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தினசரி ரயில்கள் என்று பார்த்தால் மூன்று இரவு நேர ரயில்களும், ஒரு பகல் நேர ரயிலும் இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வாரம் மூன்று முறை, வாரம் ஒரு முறை என ரயில்களும், சென்னை வழியாக செல்லும் நெடுந்தூர ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. 
1.    குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி பகல்நேர ரயில்
2.    நாகர்கோவில் - தாம்பரம்  அந்தோதையா தினசரி
3.    நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை
4.    நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில்
5.    கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் தினசரி
6.    கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி தினசரி
7.    நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில்
சென்னை வழியாக இயக்கப்படும் ரயில்கள்
8.    நாகர்கோவில் - மும்பை வாரம் இருமுறை செங்கல்பட்டு வழியாக
9.    கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயில் சென்னை எழும்பூர் வழியாக
10.    கன்னியாகுமரி – நிசாமுதீன் வாரம் இருமுறை சென்னை எழும்பூர் வழியாக
இந்த  ரயில்களில் இரவு நேரம் படுக்கை வசதியுடன் செல்லும் மூன்று ரயில்களில் முதல் ரயிலாக நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை ரயில் ஐந்து மணிக்கும் இரண்டாவது ரயில் கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் தினசரி ரயில் 5:40 மணிக்கும் மூன்றாவது ரயிலாக அனந்தபுரி ரயில் 6:00 மணிக்கும் புறப்பட்டு சென்றுவிடுகிறது. ஐந்து மணி முதல் ஆறு மணி வரை உள்ள ஒரு மணி நேர இடைவழிக்குள் மூன்று ரயில்களும் சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுகிறது. இவ்வாறு சென்னைக்கு சென்று விடுவதால் சில பயணிகள் காலதாமதமாக சென்னைக்கு செல்லவோ அல்லது அதிகாலை சென்னைக்கு செல்லவோ ரயில் வசதி இல்லை. இது மட்டுமில்லாமல் நாகர்கோவிலிருந்து தாம்பரம் வரை செல்லும்; முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்டு இயங்கும் அந்தோதையா ரயில் 3:50 மணிக்கு புறப்பட்டு 9:45 மணிக்குதான் தாம்பரம் போய் சேருகிறது. அகவே இந்த ரயில்களை ஒழுங்குபடுத்தி ஒரு ரயில் முதலில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு அதிகாலையில் சென்னை செல்லதக்கவகையிலும் இரண்டாவது ரயில் ஒரு மணி நேரம் இடைவெளிவிட்டு புறப்பட்டு செல்ல வேண்டும். மூன்றாவது கடைசி ரயிலாக இன்னும் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு ஒரு ரயில் புறப்பட்டு காலதாமதமாக சென்னை செல்ல வேண்டும்.
1.    அனந்தபுரி ரயில்
    கொல்லத்திருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி ரயில் கல்குளம் (6,03,918) மற்றும் விளவன்கோடு (5,87,924) தாலுகாவை சார்ந்த 11,91,842 மக்கள் தொகை பயணிகள் அதிக அளவில் தலைநகருக்கு செல்ல இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலை சூப்பர்பாஸ்டு  ரயிலாக மாற்றம் செய்து அதிகாலை 6:00 மணிக்கு சென்னை செல்லதக்க வகையில் மாற்றம் செய்ய வேண்டும். 
2.    கன்னியாகுமரி ரயில்
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு அதிகாலையில் சென்று சேருவதால் ரயில்தான் குமரி மக்களின் முதல் முக்கிய உள்ளது. கன்னியாகுமரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணத்துக்கு வரும் பயணிகளும் இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலேயே நம்பிஉள்ளனர். இவர்கள் இந்த ரயிலில் வந்தால் சூரிய உதயம் மற்றும் சூரியம் மறைவது என இரண்டையும் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அல்லது இதைப்பார்க்க வேண்டுமானால் ஒருநாள் கூட அங்கு தங்கவேண்டிய சூழல் உள்ளது. ஆகவே இந்த ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதன்படி இந்த ரயிலை இரவு 7:00 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு மாற்றம் செய்து சென்னைக்கு காலை 7:00 மணிக்கு போய் சேருமாறு மாற்றம் செய்ய வேண்டும். மறுமார்க்கம் இந்த ரயிலின் வேகத்ததை அதிகரித்து சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தை மாற்றம் செய்யாமல் அதிகாலை 4:45 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதால் இந்த ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் ஒரே நாளில் சூர்ய உதயம் மற்றும் சூரியன் மறைவதை பார்க்க வசதியாக இருக்கும்.
3.    நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மூன்று நாள் ரயில்:-
   நாகர்கோவிலிருந்து தாம்பரத்துக்கு புதிதாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்ட ரயிலை தற்போது இயங்கும் படியே மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு வேகத்தை அதிகப்படுத்தி இன்னமும் சீக்கிரமாக தாம்பரம் செல்லும்படியாக இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் இந்த தடத்தில் தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
4.    நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில்:-
   நாகர்கோவிலிருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையையும், வழித்தடத்தை திருச்சி செல்லாமல்  மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதன்படி நாகர்கோவிலிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லாமல் மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக அதிகாலை 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லதக்க வகையில் இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலின் சேவையை அதிகரித்து வாரம் மூன்று நாள் செல்லதக்க வகையில் இயக்க வேண்டும்.
இவ்வாறு  சென்னை செல்லும் ரயில்கள் இயக்கும் போது முன்று ரயில்களும் ஒருமணிநேரம் இடைவெளிக்குள் செல்லுமாறு இயக்கப்படும். 
நாகர்கோவில் புறப்படும் நேரம்
1.    நாகர்கோவில் - தாம்பரம் அந்தோதையா மாலை 3:50 மணி 
2.    நாகர்கோவில் - தாம்பரம் - மாலை 5:00 மணி
3.    கொல்லம் - சென்னை அனந்தபுரி – மாலை 6:00 மணி
4.    கன்னியாகுமரி – சென்னை – மாலை 7:00 மணி
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo